tamilnadu

img

தோல்வி பயம் பிடித்து ஆட்டுவதால் மதவெறியைத் தூண்டுகிறார்...

சென்னை, ஏப்.22- காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதம ராக இருந்த மன்மோகன் சிங் என்ன  சொன்னார்... “நாட்டின் சொத்து களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை” என்றார். அந்த வகையில்,  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்க ளிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்து கள் எல்லாவற்றையும் பறித்து ஊடு ருவல்காரர்களுக்கு கொடுத்து விடும்” என்று ராஜஸ்தான் மாநிலம்  பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி  பேசியது நாடு தழுவிய விவாதங்க ளுக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த  கட்சிகளின் தலைவர்கள் தங்களின்  கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணைய ஆத்மா சாந்தியடையட்டும்
தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், பாஜக-வின்  தேர்தல் அத்துமீறல்களை தொட ர்ந்து பதிவிட்டு வருகிறார். ஆனால்,  தேர்தல் ஆணையம் எந்த நட வடிக்கையும் எடுப்பதில்லை. இந்த  நிலையில், பிரதமர் மோடி ராஜஸ் தானில் பேசியதை பகிர்ந்துள்ள அவர், “தேர்தல் ஆணையத்தின்  ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று  பதிவிட்டுள்ளார். தேர்தல் ஆணை யம் இறந்து விட்டது என்ற விமர் சனத்தையே இவ்வாறு அவர் முன்  வைத்துள்ளார்.

கல்லறைக்குள் சென்று விட்டதா ஆணையம்?
அதேபோல “தேர்தல் ஆணை யம் செயல்படுகிறதா... இல்லை, கல்லறைக்குள் சென்று விட்டதா?”  என்று கேள்வி எழுப்பி இருக்கும் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்  சர் மனோ தங்கராஜ்,“ மோடியின்  பேச்சில் தோல்வி பயமும், விரக்தி யும் வெளிப்படையாகவே தெரி கிறது” என்று சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்.

மோடியின் கீழ்த்தரமான பேச்சு
பிரதமர் மோடியின் வெறுப்பு  பேச்சுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ்  கடும் கண்டனம் தெரிவித்துள் ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “இந்த கீழ்த்தர மான பேச்சையும் வரலாறு பதிவு செய்யும். அரசருக்கு அறிவுரை சொல்லி எந்தப் பயனும் இல்லை. அதிகாரத்துக்கு அவர் அலைவது வெளிப்படையாக தெரிகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு அவரை  அச்சுறுத்தி விட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் மக்கள் அவர்களுக்கு  பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப் பிட்டுள்ளார்.

குறுகிய சிந்தனை கொண்ட பிரதமர்
செய்தியாளர்களை சந்தித்த  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் இரா. முத்தரசன்,  “பாஜக, 10 ஆண்டுகால சாதனை களை கூறி பிரச்சாரம் செய்யாமல் மத ரீதியான பிரச்சனைகளை கிளப்பி  வாக்குகள் பெறலாம் என்கிற குறுக்கு வழியை தேடிக் கொண்டி ருக்கிறது. பாஜக மதரீதியான ஒரு மோதலை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தி வாக்குகளை பெற்று  விட முயற்சிக்கிறது. குறுகிய சிந்த னையோடு பிரதமர் செயல்படு கிறார்; அதனை மக்கள் நிச்சய மாக நிராகரிப்பார்கள்” என்றார்.

தரங்கெட்ட செயல்பாடுகள்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள கண்டன  பதிவில், “ஒரு மூன்றாம் தரப் பேச்சா ளர் போல ஒரு நாட்டின் பிரதமர்  பேசியிருப்பது இந்திய நாட்டையே  உலக அரங்கில் வெட்கித் தலை குனிய வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரத மர்கள் யாருமே இது போன்ற தரங்  கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்ட தில்லை. தேர்தல் நடத்தை விதி முறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை  செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதம ராக அவர் தேர்தல் நடத்தை விதி முறையையும் பின்பற்றவில்லை. நாட்டின் இறையாண்மை மற்றும்  அரசியல் சாசனத்தின் சாராம்சத் தையும் மதிக்கவில்லை. அவர் மீது  இந்திய தேர்தல் ஆணையம் கடும்  நடவடிக்கை எடுத்து தனது நடு நிலையை நிரூபிக்க வேண்டும். இதை இந்தியத் தேர்தல் ஆணையம் மவு னமாகக் கடந்து போனால்  அதன் நம்பகத் தன்மை உலக அரங்  கில் கேள்விக் குறியாகி விடும்” என்று பதிவிட்டுள்ளார்.

;