tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி குரூப் 1  முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்ச்ப் குரூப் 1 முதல்நிலை தேர்வு தேதியைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு தேதியைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று அறிவித்துள்ளது.

இதில் துணை ஆட்சியaர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் முதலிய பணிகளுக்கு குரூப் 1 தேர்வு  மூலம் நிரப்பப்படுகிறது. காலியாக உள்ள 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் -1 முதல்நிலை எழுத்துத் தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறயுள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

;