tamilnadu

img

நூறுநாள் வேலையில் சாதிப்பிரிவினை செய்வதற்கு எதிராக பிரச்சாரம், போராட்டம்... விவசாயத்தொழிலாளர் சங்கம் அறிவிப்பு.....

குடவாசல்:
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம் கொல்லுமாங்குடியில்  மண்டபத்தில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் எஸ். திருநாவுக்கரசு, மாநிலப் பொதுச் செயலாளர்  வீ.அமிர்தலிங்கம்,மாநிலப் பொருளாளர் எஸ். சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் திட்டத்தில்சாதிப் பிரிவினையை ஏற்படுத்த வழிவகுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு முறையை ரத்து செய்ய வேண்டும்.  தமிழ்நாடு அரசு தனது நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற வேலைவாய்ப்புக்கு ரூ.100 கோடி அறிவித்ததை வரவேற்கிறோம். நகர்ப்புறம், கிராமங்களில் 50 லட்சம் தொழிலாளர்கள் வேலை யின்றி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு முழுமையாக  வேலைதர வேண்டுமானால் குறைந்தபட்சம் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும். மகாத்மா காந்திதேசிய ஊரக வேலைத் திட்டத்தை 150 நாட்களாகவும் ரூ.300 தினக்கூலிவழங்க ஒன்றிய அரசை மாநில அரசுவலியுறுத்த வேண்டும். இதுகுறித்த மாநில அரசின் கொள்கை அறிவிப்பை செயல்படுத்த ஒன்றிய அரசிடம் மக்கள வையிலும், மாநிலங்களவையிலும் வலியுறுத்த வேண்டும். கடும் விலைவாசி உயர்வை கணக்கில்கொண்டு நூறுநாள் வேலையிலும் விவசாய பணிகளிலும் தினக்கூலி ரூ.600 கிடைக்க உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை சாதியாக பிரிவினை செய்து ஊதியமும், வேலையும் வழங்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், வட்டமேஜை மாநாடு உள்ளிட்ட இயக்கங்கள் மூலம் எதிர்த்து போராடுவது என்று முடிவு செய்யப்பட்டது.தமிழகத்தில் சராசரியாக 45 நாளுக்கு மேல் ஒவ்வொரு நிதியாண்டில் வேலை தருவது இல்லை. புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள திமுக தலைமையிலான அரசு இதனை கவனத்தில் கொண்டுவேலைக்கு வரும் அனைத்து  குடும்பங்களுக்கும் 100 நாள் வேலை வழங்குவதை உறுதி செய்யவேண்டும். இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கோவில் நிலம் குறித்து வழங்கியுள்ள தீர்ப்பானது அடித்தட்டு மக்கள் வாழ்க்கையை நிலை குலைய செய்யும். 

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசு ஆணை எண் 377 கோவில் நிலங்கள் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கவும், அதற்கான சந்தை விலையை அரசு வழங்கும் என்பதோடு கோவில்நிலங்களில் சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகளை பாதுகாக்கசென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்துகிறோம்.சாமானிய மக்களை கோயில் நிலங்களில் இருந்து வெளியேற்று வது, அநியாயமாக கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்த கோருகிறோம். முன்னதாக விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மறைந்த தோழர் ஜி.மணி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

;