tamilnadu

img

மின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 29- தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கா லத்தில் மின் கட்டணம் கடுமையாக உயர்த்த ப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ள மின்கட்ட ணத்தை ரத்து செய்திடவும், ஊரடங்கு கால த்திற்கு முன்னதாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வசூலித்த கட்டணத்தை ஊர டங்கு காலத்திலும் வசூலிக்க வேண்டும் என  வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில், மாநிலம் தழுவிய அளவில், மின்வா ரிய அலுவலகங்கள் மூலமாக தமிழக முதல மைச்சருக்கு மனுக்களை அனுப்பி, தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை  பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமை வகித்தார். அம்மாபேட்டை மின்வாரிய அலுவ லகத்தில் நகரச் செயலாளர் ரவி தலைமையி லும், மாரியம்மன் கோவிலில் மாவட்டக்குழு  உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி தலை மையிலும் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவையாறில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமையிலும், நடுக்காவேரியில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பழனிஅய்யா தலைமையிலும் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு ஒன்றியங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

;