tamilnadu

img

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் காலமானார்...

மும்பை
இந்தியாவின் பழம்பெரும் நடிகரான ரிஷிகபூர் பாலிவுட் திரையுலகில் பிரபலமானவர். 1950 முதல் 2020-ஆம் ஆண்டு வரை 70 ஆண்டுகள் இந்தி திரையுலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ரிஷி கபூருக்கு 2018-ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவிற்குத் திரும்பினார். மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்தடுத்து 3 படங்களில் நடித்தார். இதில் இரண்டு படம் வெளியாகியுள்ள நிலையில், ஷர்மாஜி நாமகீன் என்ற படம் படப்பிடிப்போடு நிற்கிறது.

இந்நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள  எச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மீண்டும் புற்றுநோய் தீவிரமடைந்து மூச்சுத் திணறல் உள்ளதாகவும், தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக அவரது சகோதரர் ரந்தீர் கபூர் அடிக்கடி தகவல் தெரிவித்து கொண்டிருந்த சிகிச்சை பலனின்றி ரிஷிகபூர் இன்று காலையில் உயிரிழந்தார்.

68 வயதாகும் ரிஷி கபூருக்கு நடிகை நீத்து சிங் என்ற மனைவியும், ரன்பீர் கபூர் என்ற மகனும் உள்ளனர். இதில்  ரன்பீர் கபூர் அவரைப்போலவே இந்தியில் தற்போது முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் மரணமடைந்து 2 நாட்கள் கூட ஆகாத நிலையில், ரிஷி கபூர் மறைந்துள்ளார். இதனால் இந்தி திரையுலகம் அடுத்தடுத்து அதிர்ச்சியைச் சந்தித்து வருகிறது. 

;