tamilnadu

img

பொன்விழா காணும் மின் ஊழியர் மத்திய அமைப்பு - எஸ்.ராஜேந்திரன்

1970ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் நாள் கூடல் மாநகரான மதுரையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு துவங்கப்பட்டது. இன்று ஐம்பதாவது ஆண்டைத் தொடுகிறது. இந்த ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் மின் ஊழியர் மத்திய அமைப்பு ஊழியர் நலன் காக்கும் அமைப்பாகவும், விவசாயிகளுக்கும், மின் நுகர்வோர் களுக்கும் தரமான மின்சாரம், தடையில்லா மின்சாரம், மக்கள் வாங்கும் விலையில் மின்சாரம் என்ற கோரிக் கையை தொடர்ந்து எடுத்துச் சென்று போராடி வருகிறது. மின்வாரியத்தில் பணியாற்றிய தினக்கூலி தொழிலாளர்க ளை, வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலமாக அவர்க ளுக்கான கூலி உயர்வையும், விடுமுறையையும், சலுகைக ளையும் பெற்றுத்தந்த அமைப்பு மின் ஊழியர் மத்திய அமைப்பு. கோவை மாவட்டம் ஆழியாறு அணைக்கட்டு தொழிலாளர்கள் நடத்திய போராட்டம்தான் தினக்கூலி தொழி லாளர்களுடைய பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது.

தமிழக காவல்துறையின் கொடிய அடக்குமுறையும், சிறை வாசமும் தொழிலாளர் போராட்டத்தை ஒருபோதும் ஒடுக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டிய போராட்டம் அது. இந்த போராட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சில ரைக்கூட தமிழக காவல்துறை ஈவிரக்கமின்றி கைது செய்தது. பெண்கள் வேலூர் சிறையிலும், ஆண்கள் கோவை சிறையிலும் அடைக்கப்பட்டனர். அப்போது இந்த போராட் டத்திற்கு தீர்வுகாண தோழர் கே.ரமணி எம்.பி., அவர்கள் பெரு முயற்சி எடுத்தார். அப்போதைய கோவை சட்டமன்ற உறுப்பினரான எம்.பூபதி அவர்களோடு இணைந்து தோழர் கே.ரமணி எடுத்த முயற்சியின் பயனாக முதலமைச்சர் அண்ணா அவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பூபதி அவர்களுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத் தின் அடிப்படையில் 450 தினக்கூலிகளுக்கு வேலை கிடைக்கவும், 277 தொழிலாளிகள் பல்வேறு மின் திட்டங்க ளுக்கு அவர்கள் விரும்பியும் சென்றனர். இந்த உத்தரவை அன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவ மனையில் இருந்த தோழர் பூபதியிடம் மின்வாரிய அதிகாரி கள் நேரடியாக கொடுத்தனர். 1972ஆம்ஆண்டில் திருநெல்வேலியில் தோழர் பி.சி.வேலாயுதம் தலைமையில் தற்செயல் தொழிலாளிக்கு சம்பளம் உயர்த்தி வழங்கக்கோரி உண்ணாவிரதத்தை துவங்கி மிகப்பெரிய காட்டுத்தீயாக தூத்துக்குடி, நெல்லை, குமரி வட்ட மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் பரவியது. இந்த போராட்டம் தான் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய உத்வே கத்தை அளித்தது. இதன் காரணமாக படிப்படியாக நான்கு ஆண்டுகளில் 32,000 தொழிலாளர்கள் பணி நிரந்தரம் பெற்றனர்.

மிசாவும் மத்திய அமைப்பும்

1975ஆம் ஆண்டு ஜூன்25ல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் அவசர கால நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதில் தொழிலாளர்களின் உரிமைகளை பாது காக்க நடைபெற்ற இயக்கத்தில் தோழர்கள் பி.சி.வேலா யுதம், கிருஷ்ணபிள்ளை, ஐ.தங்கராஜ், ராஜி, சிங்காரம் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறைவாசத்திற்கு பின்னர் விடுதலை பெற்றனர். அதேபோல தோழர் து.ஜானகி ராமன் 24.8.1976ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மின்வாரிய நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்ததுடன் ஊதியம் தரவும் மறுத்துவிட்டது. ஏழுமாத சிறைவாசத்திற்கு பின் விடுதலை செய்யப்பட்டார். மத்திய அமைப்பின் முன்னணி தோழர்கள் பல்வேறு இடங்க ளுக்கு பணி இடமாறுதல் செய்யப்பட்டனர்.

மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்க ளை பணி நிரந்தரப்படுத்த பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றம் சென்று வாதாடி நீதிபதி காலித் கமிஷன் அமைப்பதிலும், அதன் மூலம் 18,006 ஒப்பந்த ஊழி யர்களை பணி நிரந்தரப்படுத்திய அமைப்பு மின் ஊழியர் மத்திய அமைப்பு. இந்திய தொழிற்சங்க வரலாற்றில் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைக்காக நிரந்தர ஊழியர்களையும் இணைத்து கைகோர்த்துப் போராடியது மத்திய அமைப்பு மட்டுமே. பஞ்சப்படி உயர்வு, போனஸ் போன்ற உரிமைகளை பெற்றுத்தந்ததும், அதே போல களப்பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 1.7.1986ஆம் ஆண்டு முதல் பென்சனை பெற்றுத்தந்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியது மின் ஊழியர் மத்திய அமைப்பு.

புதிய பொருளாதாரக் கொள்கையின் தாக்கத்தில் மின்வா ரிய பிரிப்பை அனுமதிக்க முடியாது என்று வீரஞ்செறிந்த போராட்டங்களையும், வேலை நிறுத்தத்தை நடத்தி மின்வா ரியத்தை பொதுத்துறையாக பாதுகாத்து வருகிறது. அமைப்பின் மகத்தான தலைவர்கள் வி.பி.சிந்தன், து.ஜானகிராமன், சி.கோவிந்தராஜன், ஏ.நல்லசிவன், கே.ரமணி, பி.சி.வேலாயுதம் ஆகியோர் உருவாக்கித் தந்த இந்த அமைப்பு இன்று பொன் விழா காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி மின் ஊழியர்கள் அடைகிறார்கள். இந்த தலைவர்கள் காட்டிய பாதையில் மின்துறையை பாதுகாக்கவும், மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணி இடங்களில் ஒப்பந்த ஊழியர்களையும், தொழில்நுட்பம் பயின்றவர்களையும் நிரப்பிடவும், தொழிற்சங்க ஒற்று மையை முன் எடுத்துச் செல்வதிலும் வர்க்க ஒற்றுமையைக்  கட்டுவதிலும் நாம் முனைப்போடு செயல்பட உறுதி யேற்போம்!

கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், 
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு)

 

 

;