tamilnadu

img

வரி ஏய்ப்பு புகாரில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ்

சென்னை:
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம்  விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்துடன் ரிங் டோன் இசையமைத்துக் கொடுப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்த நிலையில், அதற்கான ஊதியம் 3 கோடியே 47 லட்சம் ரூபாயை தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளை கணக்கில் செலுத்தும்படி ரஹ்மான் கூறியுள்ளார்.இதன்மூலம்  வருமான வரி செலுத்துவதை தவிர்க்க ரஹ்மான் முயற்சித்ததாக கூறி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதில், ரஹ்மான் தரப்பு விளக்கத்தை ஏற்று, விசாரணையை கைவிட்டு முதன்மை ஆணையர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை வருமான வரித் துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து  வருமான வரித்துறை தொடர்ந்த  வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

;