tamilnadu

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்க முடிவு

திருச்சிராப்பள்ளி, ஏப்.25-திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க (சிஐடியு) நிர்வாகிகள் கூட்டம் வியாழனன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க(சிஐடியு) மாவட்டச் செயலாளர் ராமர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 3 முறை ஒப்பந்தம் போட்டும் இதுநாள் வரை மணல் மாட்டுவண்டி குவாரிகள் திறக்காததை கண்டித்து ஏப்.29-ம் தேதி மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வசிக்கும் 20 கிராமங்களில் கருப்பு கொடி கட்டுவது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்துவது முடிவெடுக்கப்பட்டது.திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க(சிஐடியு) மாவட்டத் தலைவர் சேகர், சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

;