tamilnadu

img

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் 

 திருச்சிராப்பள்ளி, செப்,24- தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் 2002-ஆம் ஆண்டு முதல் பல்வேறு சமூகப் பணிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகிறது.  மதர் தெரசா கல்வித் திட்டத்தின் கீழ் தாய், தந்தையை இழந்த, உடல் ஊனமுற்ற, கண் பார்வையற்ற, காது கேளாத, வாய் பேசாத, கைவிடப்பட்ட, ஆதரவற்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருக்கின்ற ஏழை எளிய மாணவர்கள் மற்றும் பெரும் நோய்களால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள் ஆகியோரில் நன்கு படிக்கக் கூடிய மாணவ மாணவிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பவுண்டேசன் சேர்மேன் சவரிமுத்து தலைமையில் செவ்வாய் அன்று திருச்சியில் நடைபெற்றது.  இதில் இத்திட்டதின் கீழ் இந்தாண்டு திருச்சி, டிசிஎம்எஸ்எஸ் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட பார்வையற்ற பெற்றோர்களின் குழந்தைகள் 52 பேருக்கு கல்வி உதவித் தொகையை, எல்.ஏ.குரூப் நிறுவனங்களின் தலைவர் ஜோசப் லூயிஸ் மதர் தெரசா பவுண்டேசன் சார்பாக மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கு கல்வி உதவித்தொகை ரூ 3,10,000 வழங்கினார். விழாவில் அருட்தந்தையர்கள் ஆன்ட்ருஸ் டியூரோஸ், ஆல்பர்ட் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

;