tamilnadu

img

மின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி நூதனப் போராட்டம்

திருப்பூர், ஜூன் 29 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெருப்பெ ரிச்சல் பகுதி கிளைகள் சார்பில் வாவிபா ளையம், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவ லகம் முன்பு நூதனப் போராட்டம் நடத்தப் பட்டது. மின் கணக்கீட்டு குளறுபடிகளை கண்டித் தும், மின் கணக்கீட்டாளர் நுகர்வோர் அட்டை யில் கணக்கீடு அளவினை பதிவு செய்ய வும், அனைத்து வீடுகளுக்கும் தவறாமல் கணக்கீட்டு பணியை செய்திடவும், அதிகப் படியாக வசூல் செய்த மின் கட்டண தொகையை அடுத்துவரும் மாதங்களில் வரும் மின் கட்டணத்தை கழித்து வசூல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சாதன பொருட்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி இந்த  நூதனப்போராட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய குழு உறுப்பினர் பி.மகா லிங்கம் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் கே.பழனிச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, சி.பானுமதி கிளைச் செயலாளர்கள் கணேசன், சந்திரன் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர். நிறைவாக மின் நுகர்வோரிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை வாவிபாளையம் பூலுவபட்டி பிரிவு, உதவி மின்பொறியாளர் அவர்களி டம் ஒன்றிய செயலாளர் கே. பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் மனுக்களை வழங்கினர். மேலும், மனுக்களை பெற்றுக்கொண்ட உதவி மின் பொறியாளர் மின் வாரிய அதிகாரிக்கு பொதுமக்களின் மனுக்களை மேல் நடவடிக்கைக்கு பரிந்து அனுப்புகி றேன் என்று உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது. ஆர்ப்பாட் டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

;