districts

img

குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகள்

திருப்பூர், ஜூன் 13 - சர்வதேச குழந்தை தொழிலா ளர் முறை எதிர்ப்பு தினத்தை முன் னிட்டு திருப்பூர் தொழிலாளர் துறை  தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகா தார இயக்குநரகம், மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய அரசு துறைகள், மரியாலயா, சமூக  கல்வி மற்றும் முன்னேற்ற மையம்  ஆகிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திருப்பூரில் தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத் தின. திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்  எஸ்.வினீத், குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான கையெழுத்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மரியாலயா தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த, குழந்தை தொழிலாளர் முறையினால் குழந்தைகள் மீது  இழைக்கப்படும் உடல், மன மற்றும் பாலியல் ரீதியான தாக்குதல்கள் குறித்த விழிப்புணர்வு வீதி நாட கம் அங்கு நடத்தப்பட்டது. பின்னர் குழந்தைத் தொழிலா ளர் முறைக்கு எதிரான விழிப்பு ணர்வு பேரணியை ஆட்சியர் வினீத்  கொடியசைத்து துவக்கி வைத் தார். இதில் எல்.ஆர்.ஜி அரசு கலைக்  கல்லூரி மாணவிகள் பங்கேற்ற னர். நிகழ்வின் இறுதியாக சைல்டு லைன் மற்றும் சமூக கல்வி மற்றும் முன்னேற்றம் மையம் ஏற்பாடு செய்த குழந்தை உழைப்பிற்கு எதி ரான வாகனப் பிரச்சாரத்தையும் மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து  துவக்கி வைத்தார். இந்த பிரச்சா ரமானது குறிப்பாக குழந்தைகள் தொழிலாளர் மற்றும் குழந்தைக ளுக்கான இலவச உதவி தொலை பேசி எண் 10 9 8 மற்றும் வளர் இளம் பெண் தொழிலாளர்களுக்கான இலவச தொலைபேசி எண் 1800 425 1092 ஆகிய இரு உதவி எண்களையும் மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் ஒரு  வார காலத்திற்கு திருப்பூர் மாநக ரம், மாவட்டத்தின் முக்கிய இடங்க ளில் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெ றும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கள் தெரிவித்தனர். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, திருப்பூர் ரயில் நிலையத்தில் சைல்டு லைன், மரியாலயா. சமூக  கல்வி மற்றும் முன்னேற்ற மையம்  சார்பாக வீதி நாடகம் மற்றும்  வாகன பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.

;