tamilnadu

img

சத்துணவுத் திட்டத்தை தனியார் மயமாக்குவதை எதிர்த்து மக்கள் சந்திப்பு இயக்கம்

மன்னார்குடி, மார்ச் 14- சத்துணவுத் திட்டத்தை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை எதிர்த்து மாநிலம் முழுவதிலும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற பிரசார இயக்கத்திற்கு வட்டத் தலைவர் கரிகாலன் தலைமை வகித்தார். பிரச்சார இயக்கத்தின் துவக்க நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் லதா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டச் செயலாளர் எஸ் ஆறுமுகம் துவக்கி வைத்தார். செயலாளர் ஜே வீரமணி, ஜி ராஜா மாவட்ட துணைத்தலைவர் முருகையன் முன்னாள் மாவட்ட தலைவர் ரவி துணைத் தலைவர் குணசேகரன் பவானி மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்கள் மத்தியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன காலை ஒன்பது மணிக்கு துவங்கிய பிரச்சார இயக்கம் மாலை 7 மணி வரை நீடாமங்கலம் மற்றும் நகரை ஒட்டிய கிராமங்களில் நடைபெற்றது தஞ்சாவூர் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோதண்டபாணி நிறைவுரையாற்றினார். இதில் 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

;