tamilnadu

img

மோடி ராஜினாமா செய்திருக்க வேண்டும்.... அமைச்சர்களை மாற்றியது ஏமாற்று வேலை... மயிலாடுதுறையில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி...

மயிலாடுதுறை:
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த மோடி அமைச்சர்களை மாற்றுவதற்கு பதிலாக தனது பதவியை ராஜினாமாசெய்திருந்தால் சரியாக இருந்திருக் கும் என மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் கள் சந்திப்பில் கூறினார். 

அவர் மேலும் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாட்களுக்கு முன்னர் தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். ஏற்கனவே உள்ள 12 மூத்த அமைச்சர்களைராஜினாமா செய்ய வைத்து, புதுமுகங்களை சேர்த்து தனது ஆட்சிக்கு புதுப்பொலிவை உருவாக்கியது போன்றதோற்றத்தை ஏற்படுத்த இந்த மாற்றத்தை அவர் செய்துள்ளார். இந்தமாற்றம் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. கொரோனாவில் மிகப்பெரிய இடர்பாடுகளை சந்தித்து, பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். இதன் தோல்வி காரணமாக சுகாதாரத் துறை அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார். மோடி அரசுதிறம்பட செயல்பட்டிருந்தால் கொரோனாவை முதல் அலையிலேயே கட்டுப்படுத்தியிருக்கலாம். பொருளாதாரம் அதல பாதாளத்துக்குச் சென்றிருக்கிறது. இதிலிருந்து மீள 6 அல்லது 7 ஆண்டுகள் ஆகும்என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கெல்லாம் முழு பொறுப்பேற்க வேண்டியவர் நரேந்திர மோடியேதவிர, சில அமைச்சர்களை பொறுப் பாக்கி அவர்களை மாற்றிவிட்டால் பழியை அவர்கள் மீது போட்டு தப்பித் துக்கொள்ளலாம் என நினைக்கிறார். இதற்கு பதிலாக நரேந்திர மோடியே ராஜினாமா செய்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும். தேசிய கல்விக் கொள்கை அமலாக்கப்படுவதால் முதல்கட்டமாக, பல்கலைக்கழக மானியக்குழு சார்பில்இளங்கலை பட்டப்படிப்புக்கான வரலாற்றுப் பாடங்களை திருத்துவதற்கான முன்மொழிவுகளை தந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் உண்மையான வரலாற்றையே திரித்து எழுதிபொய்யான வரலாற்றை மாணவர் களுக்கு கற்பிக்கக்கூடிய நிலையை உருவாக்கும். 

பெட்ரோல், டீசல், கேஸ், யூரியா ஆகியவற்றுக்கு மானியம் தர மறுக்கும்ஒன்றிய அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு லட்சக்கணக்கான கோடிகளை மானியமாக வழங்குகிறது. பாஜக ஆட்சியை பயன்படுத்திக் கொண்டு மேகதாதுவில் அணைகட்டும்முயற்சியை எடியூரப்பா மேற்கொள்கிறார். இதுகுறித்து, தமிழக முதல்வர் ஏற்கனவே பிரதமரைச் சந்தித்து பேசியுள்ளார். வருகிற சட்டமன்றக்கூட் டத்தில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஒன்றிய அரசு தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவியை தந் துள்ளதால் மட்டும் தமிழகத்துக்கு நல் லது நடந்துவிடாது. ஏனெனில், ஒன்றிய அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதி பங்கீட்டுத்தொகை, உள்ளாட்சி மன்றங்களுக்குத் தர வேண்டிய நிதி, தடுப்பூசி ஆகியவற்றை சரிவர வழங்கவில்லை. ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது. தமிழக அரசு பொறுப்பேற்று 2 மாதங்களில் கொரோனா தொற்றை எதிர்கொள்வதோடு, 12 ஆயிரம் கோடிக்குசலுகைகளை அறிவித்துள்ளது. படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம். நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் கணிசமான மக்கள் கோயில்நிலங்களில் குடியிருந்து வருகின்றனர்.இவர்களில் ஏழை மக்களுக்கு இலவசமாகவும், ஓரளவு வசதி படைத்தவர்களிடம் தவணை முறையில் பணத்தை வசூலித்துக் கொண்டும் பட்டா வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் வலியுறுத்துவோம். 

இவ்வாறு அவர் கூறினார்.செய்தியாளர்கள் சந்திப்பின்போது கட்சியின் மாவட்ட செயலாளர் பி. சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.மாரியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

;