tamilnadu

img

அமேசான் சொந்த தயாரிப்பு பொருள்கள் தரம் குறைந்தவை - ஆய்வில் தகவல் 

அமேசானின் சொந்த தயாரிப்பு பொருட்கள் தரம் குறைந்ததாக உள்ளது. மேலும் எளிதில் தீப்பிடிக்கக்கூடியதாகவும் இருக்கிறது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் இணைய வர்த்தகத்தில் முதல் இடத்தில் அமேசான் உள்ளது. இந்நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் 'அமேசான் பேசிக்' என்ற பெயரில் சொந்த தயாரிப்புகளையும் விற்பனை செய்து வருகிறது. மைக்ரோவேவ் ஓவன், பேட்டரி, USB கேபிள், மல்டி பிளக் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அமேசான் தயாரித்து விற்பனை செய்கிறது.  மேலும், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை அமேசான் தளத்தில் தேடும் போது, முதல் இடத்தில் அமேசானின் சொந்த தயாரிப்புகள் காட்டப்படுவதால் அதிகளவு விற்பனையாகிறது.

இந்த நிலையில், அமேசானின் சில சொந்த தயாரிப்பு பொருட்கள் தரம் குறைந்தவையாக உள்ளதாகவும், தீப்பிடித்து வருவதாகவும் சிஎன்என் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சிஎன்என் நிறுவனம் அமேசானின் மைக்ரோ வேவ் ஓவனை மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் இன்ஜினியரிங் ஆராய்ச்சித்துறைக்கு அனுப்பி வைத்து சோதனை செய்தது. அதில், மைக்ரோவேவ் ஓவனின் பேனல் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதே போல், அமேசானில் வாடிக்கையாளர் பதிவிட்ட கருத்துகளை ஆராயும் போது, மொபைலில் சார்ஜ் ஏற்றுவதற்காக அமேசானின் USB கேபிளை பயன்படுத்தும் போது மின்சக்தி தாங்காமல் எளிதில் உருகுவதாகவும், புகை வருவதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதே போல் பல வாடிக்கையாளர்கள் அமேசானின் மல்டி பிளக் பாயிண்ட் தீப்பிடிப்பதாக குற்றம்சாட்டினர். பின்னர், அந்த பொருள் அமேசான் தளத்தில் இருந்து அகற்றப்பட்டது. 

;