tamilnadu

img

5 ஆண்டுகளில் 233 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு

மத்திய உள்துறை இணையமைச்சர் தகவல்

புதுதில்லி, பிப்.6- இந்தியாவில் 2014-18 வரையிலான கால கட்டத்தில் 233 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாட்டின் இறை யாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுதல், பிரிவினைவாதத்தை தூண்டு தல், வெறுப்புணர்வை பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்படு கின்றன.  மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்த பின்னர், கடந்த 6 ஆண்டுகளில், மிக அதிகமான தேசத் துரோக வழக்குகள் போடப்பட்டு வந்தன. இதுதொடர்பாக, மாநிலங்களவையில் அர சிடம் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. 2014-ஆம் ஆண்டு முதல் 2018 வரை (5 ஆண்டுகள்) நாட்டில் எத்தனை பேர் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன எழுத்துப்பூர்வமாக இந்த கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இந்த கேள்விக்கு பதிலளித்து பேசி யிருக்கும் மத்திய உள்துறை இணையமைச் சர், கிஷன் ரெட்டி, “தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தகவலின் படி, 2014-இல் 47 பேர், 2015-இல் 30 பேர், 2016-இல் 35 பேர், 2017-ஆம் ஆண்டில் 51 பேர், 2018-ஆம் ஆண்டில் 70 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு முதல் 2018 வரை ஒட்டுமொத்தமாக 233 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
 

;