tamilnadu

img

புலம்பெயர் தொழிலாளர்களை கைது செய்த குஜராத் பாஜக அரசு....

சூரத்:
சொந்த ஊர்களுக்கு அனுப்பக்கோரி வன்முறையில் ஈடுபட்டார் கள் என்று, சூரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 100 பேரை குஜராத் பாஜக அரசு கைது செய் துள்ளது.
உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட்,பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், குஜராத் மாநிலம் சூரத் நகரையொட்டிய ஹசீரா தொழிற்பேட்டைநிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். அவர்கள் மோரா கிராமத்தில்வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.இதனிடையே கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த அவர்கள்தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு, தொடர்ந்துஅரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் 45 நாட்களுக்குமேலாகியும் அவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. குறிப்பிட்ட சில ஆயிரம் பேரை மட்டும் குஜராத் அரசுப் பேருந்துகளில் அனுப்பி வைப்பதை அறிந்த அவர்கள், தங்களையும் அனுப்பி வைக் குமாறு, மோரா கிராமத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர். 

இந்தப் போராட்டத்தை சரியாக கையாள போலீசார், தொழிலாளர்கள், தங்கள் மீது கற்களைவீசினார்கள் என்று கூறி, தடியடிமேற்கொண்டும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டத் தைக் கலைத்துள்ளனர். அத்துடன், போலீசாரைத் தாக்கினார்கள்; கலவரத்தில் ஈடுபட் டார்கள்; பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினார்கள் என்று கூறி100 புலம்பெயர் தொழிலாளர்களை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொள்ளை நோய்கள் சட்டத்தின் கீழும் வழக்குபதிவு செய்துள்ளனர்.

;