tamilnadu

img

இந்திய பெரும்பணக்காரர்கள் எண்ணிக்கை 138 ஆக அதிகரிப்பு... அம்பானிக்கு முதலிடம்; அதானிக்கு மூன்றாமிடம்

புதுதில்லி:
உலகப் பணக்காரர்களின் பட்டியலை, ஹூரன் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 1 பில்லியன் டாலருக்கு மேல் (சுமார்7 ஆயிரத்து 200 கோடி) சொத்துபடைத்த பணக்காரர்கள் இப்பட்டியலில் இடம்பெறுகின்றனர்.அதன்படி, மொத்தம் 2 ஆயிரத்து 817 பேர் அடங்கிய 2019-ஆம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலை (Hurun global rich list 2019) தற்போது வெளியிட்டுள்ளது. இதில், 480 பேர்புதிதாக இணைந்துள்ளனர். இவர் களில் இந்தியாவிலிருந்து மட்டும் 34 பேர் புதிதாக பெரும்பணக்காரர் பட்டியலில் இணைந்துள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், வழக்கம்போல ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ முதலாளி முகேஷ் அம்பானி, 67 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன், முதலிடத்தில் நீடிக்கிறார்.ஆசிய அளவிலும் முகேஷ் அம்பானிதான் முதற்பெரும் பணக்காரர் ஆவார்.‘ஹிந்துஜா’ குழுமத்தைச் சேர்ந்த எஸ்.பி. ஹிந்துஜா குடும்பம் 27 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், கவுதம் அதானி (17 பில்லியன் டாலர்) மூன்றாம் இடத்திலும், ஷிவ் நாடார் (17 பில்லியன் டாலர்) நான்காம் இடத்திலும், லட்சுமி மிட்டல்(15 பில்லியன் டாலர்) ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றனர்.

இந்தியாவில், 2019ஆம் ஆண்டில் மாதத்துக்கு மூன்று பேர் என்ற விகிதத்தில், மொத்தம் 34 பேர் புதிதாக,உலக பணக்காரர்கள் பட்டியலில் தங் களை இணைத்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் உள்ள பில்லியன் டாலர் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் 138 ஆக உயர்ந்துள்ளது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த ‘அமேசான்’ நிறுவனத் தலைவர் ஜெப் பெசோஸ், 140 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பெர்னார்டு அர்னால்டு இரண்டாம் இடத்திலும் உள்ளனர். பில் கேட்ஸ் (106 பில்லியன் டாலர்) மூன்றாம் இடத்திற்கு போயிருக்கிறார்.
 

;