tamilnadu

img

இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது

மோடி அரசு மீது ப.சிதம்பரம் கடும் சாடல்

புதுதில்லி, ஏப்.19- கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ஏழைகள்,  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில்  டுவிட்டரில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஞாயிறன்று பதிவிட்ட கருத்தில்  கூறியிருப்பதாவது;- " ஏழை மக்கள் பணத்தை இழந்துவிட்டார்கள், உணவுக்கு வழியில்லாமல் இலவசமாகக் கிடைக்கும் சமைக்கப்பட்ட உணவுகளை வாங்குவதற்காக  வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது. இதுபோன்ற ஏராளமான சான்றுகள் உள்ளன. இந்த இதயமற்ற அரசு மக்களுக்கு ஒன்றும் செய்யாது.  ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் பணத்தை வழங்கி அவர்களைப் பசியிலிருந்து அரசால் பாதுகாக்க முடியாதா?

இந்திய உணவுக் கழகத்தில் 77 மில்லியன் டன் உணவு தானியங்கள் இருப்பு இருக்கிறதே? அதில் ஒரு சிறிய பகுதியை  எடுத்து  ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக அரசாங்கத்தால் ஏன் வழங்க முடியாது? நான் எழுப்பிய இந்த இரு கேள்விகளும் பொருளாதாரம், மற்றும் தார்மீகம் சார்ந்த கேள்விகள். இந்த கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கத் தவறிவிட்டது." எனத் தெரிவித்துள்ளார்.

;