tamilnadu

img

தனியார் ரயில்களை இயக்க 16 நிறுவனங்கள் விருப்பம்... ஏலம் குறித்து அரசு நேரில் அழைத்து விளக்கம்

புதுதில்லி:
இந்திய ரயில்வே-யை தனியார்மயமாக்க முடிவுசெய்துள்ள மத்திய பாஜகஅரசு, 2027-ஆம் ஆண்டிற்குள் 151 தனியார் ரயில்கள் ஓடும் என்று அறிவித்துள் ளது.முதற்கட்டமாக 2022-23-இல் 12 ரயில்கள்; 2023-24 ஆண்டில் 45 ரயில்கள்,2025-26 ஆண்டில் 50, மீதமுள்ளவை அதற்கு அடுத்த ஆண்டு என ஒட்டுமொத்தமாக 2026-27ஆம் ஆண்டுக்குள் 151 ரயில்களும் அறிமுகமாகும் என கூறப் பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில்களை ஏலத்தில் எடுக்க விரும்பும் நிறுவனங்களின் கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்தப் பட்டது. இதில், ஜிஎம்ஆர் குழுமம், பாம்பார்டியர், பெல், மேதா குழுமம், ஆர்கே அசோசியேட்ஸ் என 16 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இதைத் தவிர ஸ்பானிஷ் கோச் போன்றநிறுவனங்களும் கலந்து கொண்டுள் ளன.இந்த கூட்டத்தில், ரயில்களை ஏலத்தில் எடுப்பதற்கான தகுதி விவரங்கள், டெண்டர் நடவடிக்கைகள், கொள்முதல் கள், ரயில் இயக்கம், சலுகைகள் உள்ளிட்டவை குறித்து, தனியார் முதலாளிகளுக்கு இந்திய ரயில்வே அமைச்சக அதிகாரிகள் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ரயில்கள் இயக்கத்துக்கான விண் ணப்பங்கள் முதற்கட்டமாக ஜூலை 31 முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

;