tamilnadu

img

சிபிஎம் சிகார் அலுவலகத்திற்குள் காவல்துறையினர் அத்து மீறி நுழைவு, தலைவர்கள் கைது

புதுதில்லி, ஆக.31- ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் காவல்துறையினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்திருப்பதற்கு கடும் எதிர்ப்பினையும் கண்டனத்தையும் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “ஆகஸ்ட் 28அன்று முன்னெப்போதும் இல்லாத அளவில் காவல்துறைக் கும்பல் ஒன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவல கத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களான அம்ரா ராம், பேமா ராம் ஆகியோரையும் மற்றும் அலுவலகத்தி லிருந்தவர்களையும்  கைது செய்து, தரதர வென்றுவெளியே இழுத்து வந்துள்ளனர். பின்னர் அம்ரா ராமை மட்டும் விடுவித்திருக்கின்றனர். பேமா ராம் கைது செய்யப்பட்டிருக்கிறார். மறுநாள் நீதிமன்றத்தில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவல கத்திற்குள் இவ்வாறு காவல்துறையினர் நுழைவ தற்கான வாரண்ட் எதையும் அவர்கள் நீதிமன்றத்திலிருந்து பெற்றிருக்கவில்லை. இது மிகவும் மூர்க்கத்தனமான சட்டவிரோத நட வடிக்கையாகும். இதனை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டுள்ள வர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாணவிகளிடம் மூர்க்கத்தனம்

இதேபோன்றே காவல்துறையினர், அமைதி யான முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட இந்திய மாணவர் சங்க மாணவ, மாணவிக ளிடமும் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நடந்துகொண்டிருப்பதாக அறிகிறேன். இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஒரு பெண்கள் கல்லூரியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டி ருந்தனர். அந்த மாணவிகளை, ஆண் காவல்துறையினர் மிகவும் இழிவானமுறையில் கையாண்டிருக்கின்றனர். பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்ற புகைப்படங்களும், தொலைக்காட்சிகளில் வெளியாகியிருக்கின்ற காணொளிக் காட்சிகளும் எந்த அளவிற்குக் கேவலமான முறையில் காவல்துறையினர் நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதைக் காட்டு கின்றன. காவல்துறையினர் தாக்கியதில் பல மாணவர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டி ருக்கின்றன. இவற்றின்மீதும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதி யுள்ளார்.

மாதர் சங்கம் கண்டனம்

அமைதியான முறையில் போராடிய மாண வர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கமும் கண்டித்துள்ளது. மாதர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிட்டி ருப்பதாவது: பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்க மாணவர்கள் கோரியிருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் இதனை உணர்ச்சியற்ற முறையில் நிராகரித்ததுடன் மட்டுமல்லாது, காவல்துறை யினரை விட்டு போராடிய மாணவர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் குண்டாந்தடி களால் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பல  மாணவர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்து கொண்டுள்ள காவல்துறையினர்மீது உரிய நடவ டிக்கை எடுத்திட வேண்டும் என்று அனைந் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரியுள்ளது. சிகார் காவல்துறையினர் கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்புமாறு நாட்டில் உள்ள அனைத்துக் கிளைகளுக்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.             (ந.நி.)
 

;