tamilnadu

img

தென்மேற்கு பருவமழையால் நாடு முழுவதும்  2,155 பேர் பலி

புதுதில்லி:
தென்மேற்கு பருவமழையால் நாடு முழுவதும் 2,155பேர் பலியாகினர். 45 பேர் மாயமாகினர். மழை,வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதால் 22 மாநிலத்தில்26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் 8 அன்று துவங்கிய தென்மேற்குபருவமழை செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் சில பகுதிகளில் இன்னும் தென்மேற்கு பருவமழைபெய்து வருகிறது. இந்தாண்டு வழக்கத்தை விட கூடுதலாகதென்மேற்கு பருவமழை பெய்துள்ளதாக இந்திய வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தென்மேற்கு பருவமழையால்  மனிதமற்றும் விலங்கினங்கள் உயிரிழப்பு உள்ளிட்ட சம்பவங்களின்பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம்வெளியிட்டுள்ளது. அதில், சுமார் 4 மாதங்கள் நீடித்த இந்ததென்மேற்கு பருவமழையில் நாடு முழுவதும் 361மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2,155 பேர்  பலியாகினர்.45 பேரை காணவில்லை. 22 மாநிலங்களில் 26 லட்சத்துக்கும்அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சம் 430 பேரும், மேற்கு வங்கத்தில் 227 பேரும்இறந்தனர். 2.23 லட்சம் வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன.14.09 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமாகின. சுமார் 20 ஆயிரம்விலங்குகள் இறந்துள்ளன. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியகுறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் ஆந்திரா, தமிழகம்உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது மழை பெய்துவருகிறது.
 

;