tamilnadu

img

மத்திய அரசு அதிகாரிகளுக்கு வெளிநாட்டு பயிற்சி ரத்து

புதுதில்லி:
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் சிக்கன நடவடிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அரசில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், அதிகாரிகளுக்கு நடப்பு நிதியாண்டு வரை வெளிநாடு சென்று பயிற்சி எடுக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்தியப் பணியாளர் பயிற்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.தில்லியில் உள்ள ஐஎஸ்டிஎம் பயிற்சி நிறுவனம், லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் வளர்ச்சி, அடிப்படைக் கட்டமைப்புச் செலவுக்காக ரூ.83 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த இரு நிறுவனங்கள் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள், உயர் அதிகாரிகள் பல்வேறு நாடுகளுக்குப் பயிற்சிக்காக செல்கின்றனர். குறி்ப்பாக ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் பணியில் உள்ளவர்கள் அதிகமாகச் செல்கின்றனர். இந்த நிதியாண்டு மத்திய அரசு அதிகாரிகளுக்குப் பயிற்சிஅளிக்கவே தனியாக ரூ.155 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்தது.

;