tamilnadu

img

சொத்துக்களை பறிமுதல் செய்து உ.பி. அரசு அடாவடி!

லக்னோ:
சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் சொத்துக் களைப் பறிமுதல் செய்யும் அராஜகத்தை உத்தரப்பிரதேச பாஜக அரசுதுவக்கியுள்ளது.மத அடிப்படையிலான குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக,உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில், கடந்த டிசம்பர் மாதம் போராட்டங்கள் நடைபெற்றன.அப்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உயிர்களைப் பறித்துடன், ஆயிரக்கணக்கானோரை கைதுசெய்து சிறையிலும் அடைத்தனர்.

இதனிடையே, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக கூறி, போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் வேலையிலும் உத்தரப்பிரதேச பாஜக அரசு இறங்கியுள்ளது. முதற்கட்டமாக ஹசன்கஞ்ச் பகுயில் மகானீர் சவுத்ரி என்பவருக்குச் சொந்தமானஒரு ஜவுளிக்கடை மற்றும் சிற்றுண்டியை பறிமுதல் செய்துள்ளது.இதுதவிர, காதரா பகுதியில் 13 பேரிடம் ரூ. 21.76 லட்சம்சொத்துக்கள், பரிவர்தன் சவுக் பகுதியில் 24 பேரிடம் ரூ.69.65லட்சம் சொத்துக்கள், தாக்குர்கஞ்ச் பகுதியில் 10 பேரிடம் ரூ.47.85 லட்சம் சொத்துக்கள் என ரூ.1 கோடியே 55 லட்சம்மதிப்புள்ள இழப்பீட்டைப் பெற 54 பேருக்கு நோட்டீஸூம் அனுப்பியுள்ளது.

;