tamilnadu

img

கொரோனா பாதிப்பைச் சமாளிக்க இந்தியாவிற்கு மேலும் 7600 கோடி நிதி.... உலக வங்கி வழங்குகிறது....

தில்லி 
உலகை மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் இதுவரை 3 லட்சம் பேரைக் காவு வாங்கியுள்ளது. தற்போதைய நிலையில் 200-க்கும் மேற்பட்டால் கொரோனாவால் கடும் சேதாரத்தைச் சந்தித்து வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் கொரோனா பரவல் ஜெட் வேகத்தில் உள்ளது. 

இந்தியாவில் இதுவரை 82 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,649 பேர் பலியாகியுள்ளனர். தினமும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் ஆசியாவின் புதிய கொரோனா மையமாக இந்தியா மாறியுள்ளது. இந்நிலையில் கொரோனா கோரப்பிடியில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு உதவும் வகையில் மேலும் 1 பில்லியன் டாலர் (7 ஆயிரத்து 574 கோடி) சமூகப் பாதுகாப்பு தொகுப்பு நிதி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த சமூக பாதுகாப்பு நிதி 2 தவணைகளாக வழங்க உள்ளது. முதல் தவணையாக 750 மில்லியன் டாலரும் (ரூ 5,600 கோடி), அடுத்தாண்டு (2021 ஆம் நிதியாண்டு) 250 மில்லியன் டாலரும் (ரூ1,800 கோடி) வழங்க உள்ள நிலையில், நடப்பாண்டு கிடைக்கும் முதல் தவணையான கிடைக்கும் ரூ 5,600 கோடி நிதியைப் பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா மூலம் நாடு முழுவதும் செயல்படுத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் 1 பில்லியன் டாலர் வழங்குவதாக உலக வங்கி ஒப்புதல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

;