tamilnadu

img

வாட்ஸ் அப் செட்டிங்கை மாற்ற அறிவுறுத்தல்

புதுதில்லி,நவ.22- பாகிஸ்தான் உளவாளி களால் வாட்ஸ் அப் குழுக்களில் சேர்க்கப்படுவதை தவிர்க்க, பாது காப்பு செட்டிங்கை உடனடியாக மாற்றும்படி வீரர்களை இந்தியா ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ராணுவம் விடுத்துள்ள அறிவுறுத்தலில்,  இந்திய ராணுவ வீரர் ஒருவரின் வாட்ஸ் அப் எண், பாகிஸ்தான் உளவாளி என சந்தேகிக்கப்படும் நபரால் வாட்ஸ் அப் குழுவில் சேர்க்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அதிலிருந்து வெளியேறி விட்டதாகவும் ஆதலால் பாகிஸ் தான் உளவாளிகளால் வாட்ஸ்  அப் குருப்பில் சேர்க்கப்படு வதை தவிர்க்க முன்பின் தெரியா தோரால் குருப்பில் சேர்க்கப் படுவதை தடுக்கும் வகையில், வாட்ஸ் அப் பாதுகாப்பு  செட்டிங்கை மாற்றுமாறு ராணு வம் கேட்டுக்கொண்டுள்ளது.

;