world

img

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! தில்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது!

ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷில்  மதியம் 2.50 மணியளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காபுலுக்கு வடகிழக்கிலிருந்து 241 கி.மீ தொலைவிலும், பூமிக்கு அடியில் 220 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தின் மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தில்லி உள்ளிட்ட வட இந்தியாவில் சில பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் லேசாக உணரப்பட்டது.

நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் உள்ளிட்ட தேசிய தலைநகர் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

சண்டிகர், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

பாகிஸ்தான் ஊடகங்களின் அறிக்கைகளின்படி, லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் கைபர் பக்துன்க்வா நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

உயிர்ச் சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது, தில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பல கட்டங்கள் நில அதிர்வால் குலுங்கின.

;