world

img

உணவு இறையாண்மையை பாதுகாக்க இயக்கம் விவசாயிகளின் சர்வதேச தொழிற்சங்க மாநாடு அழைப்பு

டாக்கர்(செனகல்), ஏப்.26 - மேற்கு ஆப்பிரிக்காவில் செனகல்  நாட்டின் தலைநகர் டாக்கரில் ஏப்ரல் 9 -  14 தேதிகளில் நடைபெற்ற விவசாயம், உணவு, வர்த்தகம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களின் சர்வதேச தொழிற்சங்க இண்டர்நேஷனலின் 5ஆவது  சர்வதேச மாநாடு நடை பெற்றது. இதில் அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா ளர் விஜூ கிருஷ்ணன், நிதிச் செய லாளர் கிருஷ்ணபிரசாத், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.வெங்கட், இணைச் செயலாளர் விக்ரம் சிங் உட்பட உலகம் முழுவதும் 86 நாடுகளி லிருந்து 141 பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டார்கள்.

தொழிற்சங்க இண்டர்நேஷனலின் பொதுச் செயலாளர் ஜூலியன் ஹக் மாநாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். தொடக்கநாள் அமர்வின்போது அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜூகிருஷ்ணன் நவீன தாராளமய முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக விவசாயிகள் மத்தியில் சர்வ தேச ஒருமைப்பாடு உருவாக வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தி உரைநிகழ்த்தினார். மேலும் அவர் தம் உரையின்போது இந்தியா வில் கார்ப்பரேட்டுகள் விவசாயத்தில் மேற்கொள்ள முயன்ற முயற்சிகளை எப்படி விவசாயிகள் ஒன்றுபட்ட போரா ட்டத்தின்மூலம் முறியடித்தார்கள் என்பதையும் விளக்கினார்.

பின்னர் மாநாட்டில், விஜூ கிருஷ்ணன் தொழிற்சங்க இண்டர்நேஷ னலின் செயலகத்திற்குத் தேர்ந் தெடுக்கப்பட்டார். அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் தலை வர் ஏ.விஜயராகவன், குல்சார் சிங்  கோரியா மற்றும் ராவுலா வெங்கய்யா  முதலானவர்கள் தொழிற்சங்க இண்டர் நேஷனலின் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  

மாநாடு, உலக அளவில் அமைதி மற்றும் ஆயுதக் குறைப்புக்காக அழைப்பு விடுத்தது. குறிப்பாக இஸ்ரேல், காசா மீது போரிட்டுவரும் பின்னணியில் உணவு இறை யாண்மையைப் பாதுகாக்கும் இயக்கங் களை உருவாக்கவும், பசி-பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராடவும் அறைகூவல் விடுத்தது.       (ந.நி.)

;