உலகளாவிய ராணுவச் செலவு 2,440 கோடி டாலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
2022-2023 க்கு இடையில் மட்டும் 6.8 சதவீதம் வரை ஆயுதங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. 2009 க்குப் பிறகு தான் ஆயுதங்களுக்கான செலவில் செங்குத்தான உயர்வு உருவாகியுள்ளது எனவும், கடந்த 60 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்த அதிகபட்ச செலவினங்களும் இதுதான் எனவும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.