articles

img

ஈரானின் எல்லைக்குள் இஸ்ரேல் தாக்குதல்: மத்தியக்கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்

ஈரானின் எச்சரிக்கையையும் மீறி ஏப்ரல் 19 அன்று அந்நாட்டின் இஸ்ஃபஹான் நகரை நோக்கி ஏவுகணை தாக்குதலை நடத்தி யுள்ளது  இஸ்ரேல். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையிலான போர்ச் சூழலை தீவிர மாக்கியுள்ளது.   ஈரானின் எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தி யிருப்பது இஸ்ரேல் தான் என  இரு அமெரிக்க அதிகாரி கள் சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரி வித்துள்ளனர். 

தாக்குதலின் பின்னணி என்ன?

ஏப்ரல் 1 அன்று சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் ஈரான் நாட்டின் இஸ்லாமிய  புரட்சிகர காவலர் படையின் முகமது ரேசா ஜாஹேதி, முகமது ஹாடி ஹாஜி ரஹிமி என  இரண்டு மூத்த தளபதிகள் உட்பட 13 அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு நாட்டின் தூதரகம் நாட்டின் முழு மையான இறையாண்மையை பெற்ற பகுதியே ஆகும். எனவே  அந்த தாக்குதலுக்கு  பதிலடி கொடுக்கும் வகை யில் ஈரான் ராணுவம் ஏப்ரல் 13 அன்று  தாக்குதலை நடத்தியது. 

தாக்குதலை முறியடித்த இஸ்ரேல் 

170 ஆளில்லா விமானங்கள் மற்றும் 150 ஏவுகணை கள் மூலம் ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல்களை ஜோர்டான், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன்  முறி யடித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். 

பல ஆண்டுகால பனிப்போர் 

ஈரான் நாட்டின் மிகப்பெரிய தலைவராகவும் இஸ்லா மிய புரட்சிப் படையின் தலைமை தளபதியாகவும் இருந்த சுலைமானியை சில ஆண்டுகளுக்கு முன் இராக்கின் பாக்தாத் நகர விமான நிலையத்தில் வைத்து படுகொலை செய்தது அமெரிக்கா.அது மட்டு மின்றி  ஈரானுக்குள் பயங்கரவாத தாக்குதலை அரங் கேற்றுவது ஈரானியர்களை படுகொலை செய்வது என பல பத்தாண்டுகளாக பல முறை ஈரானுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளது அமெரிக்கா.  இவ்வாறு  ஈரானுடன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டணி நாடுகளின் பனிப்போர் நடந்து  வந்த நிலையில் 2023 அக்டோபர் 7 அன்று பாலஸ் தீனத்தின் மீது இஸ்ரேல் அறிவித்த போர், இதை மேலும் தீவிரமாக்கியது.

நேரடி போரில் இறங்கிய ஈரான் 

கடந்த  சில வாரங்களுக்கு முன்பு ஈரான்- பாகிஸ் தான் எல்லை மாகாணமான பலுச்சிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது.இது போன்ற தொடர் தாக்குதல்களாலும் அமெ ரிக்கா - இஸ்ரேல் கூட்டணியின் இஸ்ஃபஹான் நகரின் முக்கியத்துவம் அத்து மீறல்களாலும் பொறுமை இழந்த ஈரான் தற்போது அதிரடியான பதில டியை கொடுத்து பனிப்போரில் இருந்து நேரடிப் போரில் நுழைந்துள்ளதாக போர் நிகழ்வு போக்குகளை கவனித்து வரும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

போரைத் தவிர்க்க முயலும் ஈரான் 

ஈரான் முழுமையான போரில் இறங்கினால் மத்தியக் கிழக்கு முழுவதும் நிலவும் தீவிரமான சூழ்நிலை மேலும் அதிகரிப்பதோடு மற்ற நாடுகளும் போரில் இறங்கவேண்டிய கட்டாயம் உருவாகும். எனவே ஏப்ரல் 13 அன்று நடத்திய தாக்குதலை தொடர்ந்து போர்ச் சூழல் மேலும் தீவிரமாகி  விடாமல் இருக்க கவனமாக செயல்படுவதாகவும் தற்போது பழி வாங்கும் எண்ணம் இல்லை என்றும் போரை தவிர்ப்ப தாகவும் ஈரான் தரப்பில் கூறப்படுகிறது.  எனினும் ஈரான் எல்லைக்குள்ளோ, அரசின் சொத்துக்கள் மீதோ, ஈரான் அரசின் நலன்கள் மீதோ எந்தவொரு போர் நடவடிக்கை எடுத்தாலும் அவர்க ளுக்கு  பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தரப்பு தெளிவாக கூறி இருந்த நிலையில் ஈரானின்  இஸ்ஃ பஹான் நகர் மீது இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தி, பதற்றத்தைத் தீவிரப் படுத்தியுள்ளது. 

இஸ்ஃபஹான் நகரின் முக்கியத்துவம் 

இஸ்ஃபஹான் நகரம் ஈரான் நாட்டின் வளர்ச்சிக் கும் பொருளாதாரத்திற்கும் முக்கிய பங்காற்றும் நகர மாகும். கடந்த சில ஆண்டுகளாகவே ஈரானின் அணு  மின் துறை வளர்ச்சிக்கு பிரதான பங்கு வகித்து வரும் முக்கிய நகரமாக உள்ளது. அங்கு அணுசக்தி குறித்தான பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் அந்நாட்டின் அணுசக்தி திறனை மேம் படுத்துவதற்கான இடமாக உள்ளது.   அந்நகரத்தின் மீது உலக நாடுகளின் பார்வையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஈரானின் வளர்ச்சியை முடக்க செயலாற்றி வருகிற இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஈரானின் அணுசக்தி வளர்ச்சியை கண்காணித்து வருகின்றன. இந்த தாக்குதலில் அந்நகரில் உள்ள  அணு மின்  நிலையங்கள் மீது தாக்குதல் நடந்திருந்தால்  ஈரானின் அணுசக்தி வளர்ச்சியை அழிப்பதுடன் மோசமான பாதிப்பையும் உருவாக்கி இருக்கும். எனினும் ஈரானின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு அந்த  மூன்று ஆளில்லா விமானங்களையும் வானத்திலேயே சுட்டு வீழ்த்திய தாக ஈரானின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள் ளது.  ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த போதும் அதனை பொருட்படுத்தாமல் அந்நாட்டின் எல்லைக்குள் நடத் தப்பட்டுள்ள இந்த தாக்குதல் ஈரான் அரசை கடுமை யான கோபத்திற்கு தள்ளியுள்ளது.  

ஈரானின் எச்சரிக்கை 

இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்துள் ளார். இஸ்ரேலின் எந்தவொரு தாக்குதலுக்கும் தனது நாட்டின் பதிலடி  உடனடியாகவும் வலிமையானதா கவும்   இருக்கும், என்று  ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூதரகப் பணியாளர்களுக்கு பயணக் கட்டுப்பாடு

இதனிடையே, இஸ்ரேலில் உள்ள தனது தூதர கப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின ருக்கு பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. கிரேட்டர் டெல் அவிவ் பகுதிக்கு வெளியே, ஹெர்ஸி லியா, நெதன்யா, யாஹூதா, ஜெருசலேம் மற்றும் பி’எர் ஷெவா உள்ளிட்ட எந்தவொரு இடத்திற்கும் யாரும் பயணம் செய்யக் கூடாது என்று தனது பணியாளர்க ளை அங்குள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.பாதுகாப்புச் சூழல் மோசமாக  இருக்கிறது. அரசியல் மற்றும் அண்மைய நிகழ்வு களால் சூழல் எந்நேரமும் மாறக்கூடும் என்றும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.





 

 

;