articles

img

கம்யூனிச சிந்தனை வளர்ச்சியைக் கண்டு அஞ்சி நடுங்கும் மோடி - அ.அன்வர் உசேன்

ஐரோப்பாவில் கம்யூனிசம் எனும் ‘பூதம்’ முதலா ளித்துவத்தை துரத்திக் கொண்டுள்ளது என 1848ஆம் ஆண்டு காரல் மார்க்சும் ஏங்கெல்சும் தமது கூட்டு முயற்சியில் உருவாக்கிய புகழ்மிக்க சாகா வரம் பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையில் குறிப்பிட்ட னர். இப்பொழுதும் கம்யூனிசம், உலகம் முழுவதும் முதலாளித்துவத்தை துரத்திக் கொண்டுதான் உள்ளது. முதலாளித்துவத்தின் மிக மோசமான வடி வமான கூட்டுக் கொள்ளை முதலாளித்துவத்தையும் பாசிசத்தையும் அமலாக்க முனையும் மோடியையும் கம் யூனிசம் துரத்துகிறது. தனது அச்சத்தை வெளிக்காட்டா மல் இருக்க கம்யூனிசத்தை மக்களின் எதிரியாக இந்திய வாக்காளர்களிடம் காட்ட மோடி முனைந்துள்ளார். 

கம்யூனிசச் சிந்தனையை  நிந்தனை செய்யும் மோடி

உத்தரப்பிரதேசம் அலிகாரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் ஜாக்கிர தையாக இருக்க வேண்டும் எனவும் சொத்து மறுவிநி யோகம்  என்ற பெயரில் மக்களை கொள்ளையடிக்க காங்கிரஸ் முயல்கிறது எனவும் பேசியுள்ளார்.  “உங்களிடம் இரண்டு வீடுகள் இருந்தால் காங்கி ரஸ் ஒரு வீட்டை பிடுங்கிக்கொள்ளும்” என பேசிய மோடி “இது மாவோயிஸ்ட்  சிந்தனை” எனவும் “கம்யூ னிஸ்ட் சிந்தனை” எனவும் திருவாய் மலர்ந்துள்ளார். மேலும் இந்த கம்யூனிஸ்ட் சிந்தனையை அமலாக்கி கம்யூனிஸ்டுகள் பல தேசங்களை அழித்துள்ளனர் எனவும், அதனைத்தான் இந்தியா கூட்டணி இந்தியா வில் செய்ய முனைகிறது எனவும் பேசியுள்ளார்.  தனது ஒவ்வொரு உரையிலும் மோடி பல்வேறு பொய்களை முன்வைக்கிறார். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் எங்கும் சொத்துக்கள் மறுவிநி யோகம் குறித்து பேசவில்லை. எனவே மற்றவர்க ளின் சொத்துக்களைப் பறிக்கும் எந்த கேள்வியும் எழவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது சமூக- பொருளாதார-சாதிவாரி கணக்கெ டுப்பும் நடத்தப்படும் என்றுதான் காங்கிரஸ் அறிக்கை குறிப்பிடுகிறது. இதனை காங்கிரஸ் மட்டுமல்ல; இடது சாரிகள் உட்பட பெரும்பாலான கட்சிகள் தமது தேர்தல்  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமக கூட இந்த கோரிக்கையை தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளது. 

இந்த கோரிக்கைக்கு எதிராக உள்ள கட்சி பாஜக தான்! சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் மக்களின் பொருளாதார நிலை குறித்தும் விவரங்கள் சேகரிக்கப் படும். இதனைத்தான் மோடி திரித்து பிரச்சாரம் செய்கி றார். இப்படி விவரங்கள் சேகரிக்கப்படுவது மக்களின் சொத்துக்களை அபகரிக்க என வாய் கூசாமல் சொல்கி றார். பொருளாதார நிலை உட்பட சாதிவாரி கணக்கெ டுப்பை பாஜக எதிர்ப்பது என்பதே அதானி/ அம்பானி போன்ற தனது நண்பர்களை பாதுகாக்கவும்  உயர்சாதி யினர் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் அனுபவிக் கும் அபரிமித சலுகைகள் குறித்து வெளிவராமல் பாது காக்கவும்தான்! கூட்டுக் கொள்ளை முதலாளிகளைப் பாதுகாக்கும் நிகழ்ச்சி நிரலோடு, உயர்சாதியினரின் ‘நலன்களை’ பாதுகாப்பது என்பது ஆர்.எஸ்.எஸ்- பாஜக நிகழ்ச்சி நிரல். இடஒதுக்கீடுக்கு ஆர்.எஸ்.எஸ் எதிராக உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மைதானே!

சூறையாடலுக்கு வழிவகுத்த கொள்கைகள்

பொருளாதாரக் கொள்கைகள் குறித்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மோடி படிக்கவில்லை அல்லது திட்டமிட்டு திசைதிருப்ப எத்தனிக்கிறார்.  காங்கிரசின் தேர்தல் அறிக்கை சொல்கிறது: “1991ஆம் ஆண்டு காங்கிரஸ் தாராளமய சகாப்தத்தில் நுழைந்தது. தேசத்தை பகிரங்க, சுதந்திரமான, போட்டி யுடன் கட்டுப்பாடுகள் கொண்ட பொருளாதாரம் எனும் கட்டமைப்பை நோக்கி தேசத்தை வழிநடத்தியது”. காங்கிரசின் இந்த தாராளமயம் எனும் பொருளா தார கொள்கை எங்களுடையது எனவும் காங்கிரஸ் அதனை கடத்திகொண்டது எனவும்  அன்று பாஜக கூறியது. வாஜ்பாய் காலத்திலும் பின்னர் மோடியின் காலத்திலும் இந்த கொள்கைகளைதானே பாஜக  எல்லையின்றி கடைப்பிடித்தது. காங்கிரஸ் உருவாக்கி யிருந்த சில கட்டுப்பாடுகளையும் அகற்றிய காரணத் தால்தான் இன்று இந்தியப் பொருளாதாரம் பல சிக்கல் களை சந்திக்கிறது. பிரிட்டஷ் காலத்தில் கூட இல்லாத அளவுக்கு இன்று பொருளாதார அசமத்துவம் உரு வாகியுள்ளது என்பதை பா.ஜ.க. மறுக்க முடியுமா? இதனை முற்றிலும் மறைத்து மோடி பொய்களை தனது உரையில் முன்வைக்கிறார்.  காங்கிரசின் தேர்தல் அறிக்கை மேலும் சொல்கிறது: “ஏகபோகங்களுக்கும் பெரும் செல்வந்தர்கள் உரு வாவதற்கும் கூட்டுக் கொள்ளை முதலாளித்துவத்துக் கும் நாங்கள் எதிரானவர்கள்”

மோடி ஆட்சியில் கூட்டுக் கொள்ளை முதலாளித்து வம் (கூட்டுக் களவாணி முதலாளித்துவம்- Crony Capitalism) உருவாகியுள்ளது என்பதும் அது அகற் றப்பட வேண்டும் என்பதும் பல கட்சிகளும் தமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை கீழ்கண்ட வாறு குறிப்பிடுகிறது: “கூட்டுக் கொள்ளை முதலாளித்துவம் மற்றும் மத வாத – கார்ப்பரேட்  மக்கள் விரோத கூட்டை உருவாக் கும் கொள்கைகள் திரும்பப் பெறப்பட வேண்டும்.” பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கும் எந்த ஒரு அரசியல் இயக்கமும் கூட்டுக் கொள்ளை முதலாளித்துவம் என்பதை எதிர்த்தே ஆக வேண்டும்.   அதே சமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை வெறும் கூட்டுக் கொள்ளை முதலாளித்து வம் என்று மட்டும் மதிப்பிடாமல், கார்ப்பரேட்டுகளுக் கும் மதவாதத்துக்கும் உள்ள மக்கள் விரோத கூட்டுத் தொடர்பையும் அம்பலப்படுத்துகிறது. ஆனால் பாஜக வின் தேர்தல் அறிக்கையோ அல்லது மோடியின் உரைகளோ இது குறித்து ஒரு வார்த்தை பேசுவது  இல்லை. இந்தியா அணியில் உள்ள கட்சிகள் முன்வைக்கும் கூட்டுக் கொள்ளை முதலாளித்துவத்து க்கு எதிரான நிலைபாடுதான் மோடியை பதற்றமடை யச் செய்துள்ளது. தனது உற்ற நண்பர்களை பாது காக்க “கம்யூனிசம்” என்பதை பூச்சாண்டியாக முன்னி றுத்தி பயமுறுத்த மோடி முனைகிறார். 

மறுவிநியோகம்  கம்யூனிஸ்ட் சிந்தனைதான்!

சொத்துக்களை மறுவிநியோகம் செய்வது “மாவோ யிஸ்ட் சிந்தனை” எனவும் “கம்யூனிசச் சிந்தனை” எனவும் மோடி இகழ்கிறார். திருவாளர் மோடி அவர் களே! ஆம்! முதலாளித்துவ சமூகத்தில் உழைப்பாளி கள் உருவாக்கி முதலாளிகள் பறித்துக்கொண்டுள்ள சொத்துக்களை மறுவிநியோகம் செய்வது என்பது கம்யூனிசத்தின் மிக முக்கிய கொள்கைதான்! அதனை ஏற்றுக்கொள்வதிலோ அல்லது பகிரங்கமாக அறி விப்பதிலோ கம்யூனிஸ்டுகளுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் நீங்கள் கொச்சைப்படுத்துவது போல இரண்டு வீடுகள் இருப்பவர்களிடமிருந்து ஒரு வீட்டை பறிப்பது அல்ல கம்யூனிசம்! நீங்கள் உருவாக்கி யுள்ள கூட்டுக் கொள்ளை முதலாளிகளிடமிருந்து அதீத சொத்துக்கள் பறிக்கப்படும் என்பது நிச்சயம்.  கம்யூனிசச் சிந்தனை பல நாடுகளை அழித்துவிட்ட தாக மோடி கூறுகிறார். சோசலிசத்தை இழந்த மக்கள் தான் தமது வாழ்வாதாரம் அழிந்துவிட்டது என இன்று வருந்திக் கொண்டுள்ளனர். சோசலிச சோவியத் யூனியன் இருந்திருந்தால் இன்று அமெரிக்கா வாலாட் டாது என ரஷ்ய மக்கள் எண்ணுகின்றனர். அந்த கம்யூ னிசச் சிந்தனை படைத்த சோவியத் யூனியன் செய்த உதவிதான் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார சுயசார்புக்கும் வித்திட்டது என்பதை மோடி மறைக்கலாம்! ஆனால் அது உண்மை இல்லை என ஆகிவிடுமா? 1971 போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக 7வது கப்பற்படையை அமெரிக்கா அனுப்பிய பொழுது கம்யூனிசச் சிந்தனை படைத்த சோவியத் யூனியன்தான் இந்தியாவின் உதவிக்கு வந்தது என்பதை மோடி மறுக்க இயலுமா? இன்றும் கூட அமெரிக்க மக்க ளிடையே குறிப்பாக இளம் வயதினரிடையே சோச லிச ஆதரவு கருத்துகள் அதிகரித்துள்ளன எனும் தகவலை மோடி அறிந்துகொள்வது நல்லது.

பின்தங்கிய விஸ்வகுருவும்  முன்னேறிய கம்யூனிசச் சிந்தனையும்

கம்யூனிசச் சிந்தனைகள், வழிகாட்டலில் இயங்குவ தால்தான் இன்று அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. சீனாவின் பொருளாதாரம் 20 டிரில்லியன் டாலர் நோக்கிச் செல்லும் பொழுது இந்தியா 3 டிரில்லியன் டாலரை தாண்டுவதற்கு முயன்று கொண்டுள்ளது. கம்யூனிச சிந்தனை படைத்த சீனா வறுமையை கிட்டத்தட்ட முற்றிலும் ஒழித்துவிட்ட பொழுது இந்தியாவில் ஐ.நா. கணக்குபடியே இன்னும் 10சதவீதம் மக்கள் அதாவது 14 கோ டிப் பேர் மோசமான வறுமையில் உள்ளனர். இந்தியா வை ஒப்பிடும் பொழுது மிகவும் பின் தங்கியிருந்த வியட்நாம், இன்று தொழில் வளர்ச்சியில் இந்தியா வுக்கு சவாலாக முன்வந்துள்ளது. இந்தியா எதிர்பார்த்த  பல தொழில் முதலீடுகள் கம்யூனிசச் சிந்தனை படைத்த வியட்நாம் பக்கம் சென்று கொண்டுள்ளன என்பதை மோடியும் பாஜகவும் மறுக்க முடியுமா? கோவிட் பெருந் தொற்று காலத்தில் தன் சொந்த மக்களுக்கு இலவச தடுப்பூசி தர மறுத்தது மோடி அரசு! அமெரிக்காவின் மிக கடுமையான தடைகள் உள்ள பொழுதும் 5 தடுப்பூ சிகளை உருவாக்கி தனது மக்களை கம்யூனிசச் சிந்தனை படைத்த கியூபா காத்தது மட்டுமல்ல; தடுப்பூசி தொழில் நுட்பத்தை ஏழை அண்டை நாடுகளுக்கு இலவசமாக அளித்தது. அதுதான் கம்யூனிசச் சிந்தனை. ஐ.நா.வின் மனிதவள மேம்பாட்டு பட்டியலில் கம்யூனிசச் சிந்தனை படைத்த தேசங்களான சீனா 75ஆவது இடத்திலும், கியூபா 85ஆவது இடத்திலும் வியட்நாம் 107ஆவது இடத்திலும் இருக்கும் பொழுது ஏன் இந்தியா 134ஆவது இடத்தில் உள்ளது என்பதை விஸ்வகுரு விளக்குவாரா?

கம்யூனிசச் சிந்தனை என்னவென்பதை மோடி  அறிந்து கொள்ளவுமில்லை; புரிந்து கொள்ளவுமில்லை. கம்யூனிச எதிர்ப்பை மையமாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் பரப்பிய பிரச்சாரகரான மோடிக்கு அது சாத்தியமும் இல்லை. எனவே தான் காங்கிரஸ் உட்பட இந்தியா அணி முன்வைக்கும் குறைந்தபட்ச மாற்றுத் திட்டங்களைக் கூட ஏற்க முடியாமல், கம்யூனிசம் ஆபத்தானது என்று பேசுகிறார். ஆனால் மக்கள், கம்யூனிசச் சிந்தனைகளை தமது பொருளாதார சமூக சுரண்டல் துன்பங்களிலிருந்து விடுவிக்கும் மாற்றா கவே பார்க்கின்றனர் என்பதே உண்மை! 

;