court

img

வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது.. இதுவும் அந்த நாக்பூர் நீதிபதியின் தீர்ப்புதான்....

மும்பை:
பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை; விருப் பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டுபாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன் முறைக்கு கீழ் வராது என்று தீர்ப்பு வழங்கி, அதிர்ச்சி அளித்தவர் நீதிபதி புஷ்பா கனேடிவாலா.

இந்த அதிர்ச்சி நீங்குவதற்குஉள்ளாகவே, “5 வயது சிறுமியின் கையால், 50 வயது நபர்தனது பேண்ட் ஜிப்பை திறப்பது,ஒரு பாலியல் துன்புறுத்தல் தானே தவிர, போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றத்தில்சேர்க்க முடியாது”; என்றும் “பாலியல் வல்லுறவு நடந்திருந்தால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும். ஆனால் பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் இல்லை என மருத்துவ அறிக்கை கூறுவதால், இந்த சம்பவம் இருவரது விருப்பத்தின் பேரிலேயே நடந்திருக்கும்” என்று அடுத்தடுத்து வேறு இரண்டு வழக்குகளிலும் புஷ்பா கனேடிவாலா தீர்ப்புகளை வழங்கினார். இந்த தீர்ப்புகளின் மூலம்2 பேரின் தண்டனைக் குறைப் புக்கு வழிசெய்த நீதிபதி, 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ஒருவருக்கு விடுதலையும் வழங்கினார்.

இதைப்பார்த்த உச்ச நீதிமன்றம், மும்பை உயர்நீதிமன் றத்தின் நிரந்தர நீதிபதியாக புஷ்பா கனேடிவாலாவை நியமிப்பதற்கு கொலீஜியம் வழங்கியிருந்த பரிந்துரையை திடீரெனதிரும்பப் பெற்றுக் கொண்டது.ஆனால் நீதிபதி கனேடிவாலா அசருவதாக இல்லை.தற்போது “மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன் புறுத்தல் ஆகாது” என்று மீண் டும் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

1995-ஆம் ஆண்டு பிரசாந்த் ஜாரே என்பவரை திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்,தன்னை கணவரும், மாமியாரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக கூறி, 2004-ஆம்ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் தான், ஐபிசி பிரிவு 498 இன் படி மனைவியிடம் பணம் கேட்பது, வரதட்சணை கேட்பது துன்புறுத்தலே ஆகாது என்றுகனேடிவாலா தீர்ப்பளித்துள் ளார்.

;