districts

img

75 ஆண்டுக்கு பிறகு டிராக்டர் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்் அனுப்பி வைப்பு

தருமபுரி, ஏப்.18- ஏரிமலைக்கு 75 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக டிராக்டர் மூலம்  மின்னனு வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டது.  நாடாளுமன்ற தேர்தலை முன் னிட்டு, தருமபுரி நாடாளுமன்ற தொகுதி  பென்னாகரம் சட்டசபைக்குட்பட்ட பகு திகளுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங் கள் அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பார்வையிட் டார். இதேபோன்று, பென்னாகரம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பர்வதன  அள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சா வடி மையத்தில் அடிப்படை வசதிகள் உள்ளதா? மாற்றுத்திறனாளிகள் வாக் களிப்பதற்கு ஏதுவாக சாய்வு தளம் மற் றும் சக்கர நாற்காலிகள் தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளதா? பதற்ற மான வாக்குசாவடி மையத்தில் (Web  Streaming) இணையவழி கண்கா ணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதா? என்பவை குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட பென்னாகரம் சட்டமன்ற பிரி வில் வாக்குச்சாவடிகள் ஏரிமலை மற் றும் கோட்டூர் மலை ஆகியவற்றிற்கு, கடந்த தேர்தல் வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கழுதை மூலமே அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,  75 ஆண்டுகளுக்குப் பிறகு டிராக்டர்  மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளின் போது, பென்னாக ரம் தொகுதிக்கான தேர்தல் கண்கா ணிப்பு அலுவலர் பூங்கோதை, உதவி  தேர்தல் நடத்தும் அலுவலர் செ.நர்மதா,  பென்னாகரம் வட்டாட்சியர் ஜெ. சுகுமார் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் ஆகியோர்  உடனிருந்தனர்.

;