districts

”இதுக்கு எதுக்கு வெள்ளையும் ஜொள்ளையுமா அலையனும்”

கோவை, ஏப்.18- கோவையில் வாக்காளர்க ளுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சித்து வந்த, பா.ஜ.க நிர்வா கியை தேர்தல் பறக்கும் படை அதி காரிகள் கையும் களவுமாக பிடித்த னர். 18ஆவது மக்களவைத் தேர் தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்க ளாக நடைபெறுகிறது. அதில், முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நடை பெறுகிறது. அதற்கான பரப்புரை யில் திமுக கூட்டணி, அதிமுக  கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி கட் சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், புத னன்று மாலை 6 மணி முதல் தேர்தல்  பரப்புரை அனைத்தும் ஓய்ந்தது.  முன்னதாக, தேர்தல் தேதி அறி விக்கப்பட்ட போது கோவை வந்த  பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி வேட்பாளரு மான அண்ணாமலை பேட்டி ஒன்றை கொடுத்தார். அதில், பார திய ஜனதா கட்சி மக்களுக்கு பணம்  கொடுக்கப் போவதில்லை. வரும்  40 நாட்களுக்கு மீடியா நண்பர்கள்  பூதக் கண்ணாடி போட்டு பாருங்க.  தேர்தல் பரப்புரைக்கு கூட வந்து  பாருங்க என்று, நடிகர் திலகத்தை மிஞ்சும் அளவுக்கு வீர வசனம் பேசினார்.  ஆனால், அதற்கு நேர்மாறாக பிரச்சாரத்தை செய்தியாக்கிட பின் தொடர்ந்து வந்த ஊடகத்தினர் மீது  வசைமாறி பொழிந்தார் அண்ணா மலை. ஒரு கட்டத்தில் உச்சத் திற்கே சென்று, இந்த ஊடகத்தால் எனக்கு ஒரு ஓட்டு கிடைக்காது, இனியும் பின் தொடர்ந்து வந்தால் போலிசில் புகார் செய்வேன், சாலையில் அமர்ந்து மறியல் செய்வேன் என்றெல்லாம் கதறி னார். அப்போதே நமது தீக்கதிர்  நாளிதழில் நாம் வெளியிட்ட செய்தி யில், ஊடகத்தினர் பின்தொடர்வ தால் பணப்பட்டுவடா பாதிப்ப தால் அண்ணாமலை கதறுகிறார்  என செய்தியை வெளியிட்டிருந் தோம். இப்போது அது உண்மை என்பது வெட்ட வெளிச்சாகி உள் ளது.  அதாவது, பாஜகவினர் தேர்தல்  பரப்புரைக்கு ரூ.200, ரூ.300 கோட்டர்,  பிரியாணி என சகலமும் கொடுத்து  அழைத்து வந்ததாக குற்றச்சாட்டு  எழுந்தது. இந்நிலையில், நெல்லை யில் பாஜக வேட்பாளர் நயினார் நகேந்திரனின் உறவினர் மற்றும் பாஜக நிர்வாகியிடம் இருந்து ரூ.4  கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.  விசாரணையில், வாக்காளர்க ளுக்கு பணப்பட்டுவாடா செய்வ தற்காக கொண்டு வரப்பட்டது என் பதை உறுதி செய்து, பாஜக வேட் பாளர் நயினார் நாகேந்திரனுக்கு  போலீசார் சம்மன் அனுப்பியுள்ள னர். இதனையடுத்தே அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக் கும்படை உஷாராகியது. பாஜக  வேட்பாளர்கள் மற்றும் பாஜகவி னரை கண்காணித்து வந்தது.  இதைப்பற்றி வாய் திறக்காத  அண்ணாமலை, பொய்களை அள்ளி வீசி, வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டு வந்திருந்தார். இந்த நிலை யில், தற்போது அண்ணாமலைக்கு வாக்களிப்பதற்காக கோவையைச் சேர்ந்த ஒரு பாஜக நிர்வாகி பணம் பட்டுவாடா செய்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.  கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலு வபட்டி பகுதியில் வாக்காளர்க ளுக்கு பணம் விநியோகிக்கப்ப டுவதாக மாவட்ட தேர்தல் கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் வந்துள் ளது. தகவலை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் பறக்கும் படை யினருக்கு அனுப்பப்பட்டது. தகவ லின் அடிப்படையில், துணை மாநில வரி அலுவலர் புஷ்பா தேவி,  சிறப்பு உதவி ஆய்வாளர் காளீஸ் வரி, சிறப்பு உதவி ஆய்வாளர், முத்துக்குமார் ஆகியோர் கொண்ட  தேர்தல் பறக்கும் படை குழு இந்த  சோதனையில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் பூலுவபட்டி யில் மாரியப்பன் டீக்கடையில் பல வார்டுகளில் பணத்தை பட்டுவாட செய்துவிட்டு, மேலும் சில வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க நோட்டில் பிரித்து எழுதிக் கொண்டிருந்த நபர்களை நள்ளிரவு பறக்கும் படையினர் பிடித்தனர். தொடர் சோதனையில், ஆலந்துறை பாஜகவின் மண்டல்  தலைவர் ஜோதிமணி என்பவர்  வாக்காளர்களுக்கு பணம் கொடுப் பதற்காக வைத்திருந்த ரூபாய்  81,000 பணத்தை கைப்பற்றியது டன், பேரூர் வருவாய் வட்டாட்சி யர் அலுவலகத்தில் பணத்தை ஒப்ப டைத்தனர். மேலும், பிடிக்கும் பொழுது வாக்காளரின் பெயர்,  முகவரி அடங்கிய பூத் ஸ்லீப்பை யும் கைப்பற்றினர். பணம், வாக்காளர்கள் விவரம்  பறிமுதல் செய்யப்பட்ட பாஜக வைச் சார்ந்த ஆலாந்துறை மண்டல்  தலைவர் ஜோதிமணி மற்றும் பாஜக மாநகர் மாவட்டச் செயலா ளர் மாரிமுத்து ஆகியோர் பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  முன்னதாக, பூலுவபட்டி பஞ்சா யத்தில் வார்டு எண் 12,13,14,15  ஆகிய பகுதிகளில் வாக்காளர்க ளுக்கு பணம் விநியோகிக்கப்பட் டதாகவும், அடுத்த வார்டுகளுக்கு பணம் விநியோகிக்க ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த நிலையில், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலில்  மேற்கொண்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. தொடர்ந்து,

ஆலந்துறை காவல் நிலையத்தில் வழக்குப்ப திவு செய்யப்பட்டு கைது செய் யப்பட்டுள்ளனர்.  கோவை பாஜக நிர்வாகி கைதான நிலையில், “இதுக்கு எதுக் குடா வெள்ளையும் ஜொள்ளை யுமா அலையனும் அண்ணா மலை” என மக்கள் சமூக வலைத ளத்தில் கலாய்க்க ஆரம்பித்துள்ள னர்.  திமுக புகார் அண்ணாமலைக்கு வாக்களிக் கச்சொல்லி பாஜகவினர் பணப் பட்டுவடா செய்து கைதாகியுள்ள நிலையில், ஜி பே மூலம் பாஜகவி னர் வாக்களிப்பதற்கு பணம் அனுப் புவதாக திமுகவினர் மாவட்ட தேர் தல் அதிகாரிகயிடம் புகார் தெரிவித் துள்ளனர். கோவை வடக்கு மாவட்ட வழக் கறிஞர்கள் அணி அமைப்பாளராக இருக்கும் பழனிச்சாமி, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு புகார் மனு  அனுப்பியுள்ளார். அதில் கோவை  அவிநாசி சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை அருகே உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில், வெளியூர் ஆட்கள் சட்ட விரோத மாக தங்கியுள்ளனர். அவர்கள் அலைபேசி மற்றும் தொலைபேசி வாயிலாக, வாக்காளர்களை தொடர்பு கொண்டு அண்ணாம லைக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்தும், கூகுள் பே, டிஜிட்டல்  பண பரிவர்த்தனை வாயிலாக, வாக்காளர்களுக்கு தலா 250 ரூபாய்  வீதம் பணம் அனுப்புகின்றனர் என  தெரிவித்துள்ளனர்.  மேலும், அந்த புகாரில் பாஜக தேர்தல் அலுவலகத்தில் தங்கி இருப்பவர்களின் பெயர் மற்றும் ஊர் குறித்த தகவல்களுடன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவ ரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலு வலருமான கிராந்தி குமார் பாடிக்கு  இந்த புகார் மனு அனுப்பியுள்ள னர்.

;