districts

img

ஆட்டோ சங்க கிளை சிஐடியு சங்கத்துடன்  இணைக்கும் விழா

புதுச்சேரி ரோஸ்மா திருமண நிலையம் அருகில் செயல்பட்டுவந்த  ஆட்டோ சங்க கிளை,  சிஐடியு சங்கத்துடன்  இணைக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ஆட்டோ சங்க கிளைத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சிஐடியு பிரதேச தலைவர் முருகன், சிஐடியு சங்க கொடியை  ஏற்றி வைத்தார். புதிய பெயர் பலகையை பிரதேச செயலாளர் சீனிவாசன் திறந்துவைத்தார். சிஐடியு பிரதேச நிர்வாகிகள் பிரபுராஜ், மதிவாணன், சிஐடியு ஆட்டோ  சங்க பிரதேச பொறுப்பு செயலாளர் மது, நிர்வாகிகள் நூர்முகமது, பழனி பாலன், மணவாளன்  மற்றும் கிளை நிர்வாகிகள் ரங்கன் ,சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான ஆட்டோ ஓட்டுனர்கள் விழாவில் பங்கேற்றனர்.

;