districts

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி: நடவடிக்கை எடுக்க நல்வாழ்வு இயக்கம் கோரிக்கை

சென்னை, மே 4- சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்க வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தலைவர் ரெக்ஸ் சற்குணம், செயலாளர் ந.ஞனகுரு ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தமிழகத்தில் 1940ஆம் ஆண்டுக்கு முன்னர் மருத்துவராக வேண்டும் என்றால் சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்து, குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்காலத்திலேயே அந்த விதி ரத்து செய்யப்பட்டது. தற்போது மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகும் உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் முன்னிலையில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்க வைத்துள்ளார்கள். இது தமிழ் மக்க ளின் உணர்வுக்கும் தமிழக அரசின் கோட்பாட்டிற்கும் எதிரானதாகும். எனவே மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக அரசு தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;