districts

img

வாச்சாத்தி தீர்ப்பு அமலாக்கம்

தருமபுரி, மார்ச் 10- வாச்சாத்தி கிராமத்தில் நிகழ்த்தப் பட்ட கொடூர சம்பவத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு நீதிமன்றத் தீர்ப்பின்படி தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்டம், வாச்சாத்தி கிராமத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு வனத்துறை யினர், காவல்துறை மற்றும் வரு வாய்த்துறையைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் சந்தனக் கடத்தல் தடுப்பு என்ற பெயரில் வரலாறு காணாத வெறி யாட்டத்தை அரங்கேற்றினார்.

18 இளம் பெண்களை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர். வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்ற அநீதிக்கும், பாதிப்புகளுக்கும் நீதிகேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தினரும் நீண்ட நெடிய போராட்டத்தினை நடத்தி வந்தனர். இதையடுத்து குற்றவாளிகளுக்கு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் விதித்த  தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதிசெய்து, குற்றவாளி களின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தது.

மேலும், பாலியல் வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட 18 பெண் களுக்கு தலா ரூ.10 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, பொரு ளாதார ரீதியாக முன்னேற தொழில் மற்றும் இரண்டும் ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்; வாச்சாத்தி கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் தமிழ்நாடு அரசு செய்து கொடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.  இதனை உடனடியாக அரசு நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலை வர்கள், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். 

நேரில் வழங்கப்பட்ட காசோலை
இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது போல் பாதிக்கப் பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வாச்சா த்தி கிராமத்திற்கு நேரில் சென்று  அரூர் கோட்டாட்சியர் வில்சன் வழங்கினார். 

இந்நிகழச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செய லாளர் தி.வ.தனுஷன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் அ.அம்புரோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, நீதி கிடைக்க போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும், நிவாரணம் வழங்கிய தமிழக அரசுக்கும் வாச்சாத்தி கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தீர்ப்பின் இதர அம்சங்களையும் நிறைவேற்ற வேண்டுகோள்
இதுகுறித்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு கூறுகையில், கடந்தா ண்டு செப்.29 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாச்சாத்தி வழக்கின் மீது நடைபெற்ற மேல்முறை யீட்டு வழக்கில், நீதியரசர் வேல்முரு கன் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்ட 18 பெண்களுக்கு உடனடியாக தலா ரூ.10 லட்சம் தற்போது வழங்கப் பட்டுள்ளதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் தமிழ்நாடு அரசுக்கும், தமழ்நாடு முதல்வருக்கும் நெஞ்சார்ந்த நன்றி யினை தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோல் உயர்நீதிமன்ற தீர்ப்பின் இதர முக்கிய அம்சங்களான அரசு வேலை, நிலம் வழங்க வேண்டும். வீடற்ற மக்களுக்கு வீடு  வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு சிலருக்கு வீடு வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் தரமான வீடு களை கட்டித்தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

;