districts

சாதிய பாகுபாடு கடைப்பிடித்த தனியார் பள்ளி ஆசிரியைகளை கைது செய்திடுக! திண்டுக்கல்லில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், மார்ச் 1- சின்னாளபட்டியில் தனியார் பள்ளியில் மாணவிகளிடம் சாதிய பாகுபாடு கடை பிடித்த ஆசிரியைகளை கைது செய்ய  வேண்டும் என்று வலியுறுத்தி திண்டுக்கல் லில் முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக மார்ச்  1 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சமீபத்தில் சின்னாளபட்டியில் உள்ள  தனியார் பள்ளியில் பட்டியலின மாணவி களிடம் ஆசிரியைகள் சாதிய பாகுபாடு கடைபிடித்த காரணத்தால் 2 மாணவிகள் பள்ளி கழிப்பறையில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.  இது தொடர்பாக ஒரு ஆசிரியை மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியை,  உடற்கல்வி ஆசி ரியை உள்ளிட்ட 5 பேர் விசாரிக்கப்பட்டும் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. பட்டியலின மாணவிகளிடம் தீண்  டாமை கடைபிடித்த ஆசிரியைகளை  வன்  கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது  செய்யப்பட வேண்டும். பள்ளி நிர்வாகத்தின்  மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் சார்பாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்  பாட்டத்திற்கு கே.டி.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாநில தலைவர் டி. செல்லக்கண்ணு,  மாவட்ட நிர்வாகிகள் அருள்செல்வன்,வனஜா, சோ.மோகனா,  டி.முத்துச்சாமி,  கே.எஸ்.கணேசன் (சிபிஎம் மாமன்ற உறுப்பினர்) தமிழர் சமூக நீதிக்கழ கம் மாநிலத்தலைவர் சுரா.தங்கபாண்டி யன், பொதுச்செயலாளர் சரவணப்பெரு மாள், ஆதிதமிழர் பேரவை கொள்கை பரப்புச்செயலாளர் தலித் சுப்ரமணி ஆகி யோர் பேசினர். மாணவர் சங்க மாவட்டத்  தலைவர் முகேஷ்,  மாவட்டச்செயலாளர் தீபக்ராஜ், வாலிபர் சங்கம் மாவட்டச்செய லாளர் கே.ஆர்.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாநிலத் தலைவர் டி.செல்லக்  கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகை யில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திண்டுக்  கல் மாவட்ட தலைவர்கள் அந்த மாணவி களை சந்தித்து பேசிய போது, நாங்கள் பள்ளியில் உள்ள பேருந்துக்கு பணம் செலுத்தியும் கூட எங்களை அந்த பேருந் தில் உட்கார அனுமதிக்கவில்லை. இது  தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை உட்பட வகுப்பு ஆசிரியைகள் மீது நாங்கள் புகார் சொன்ன போது ஆசிரியைகளும் சக மாணவிகளைப் போலவே எங்களை சாதியைச் சொல்லி இழிவாக பேசினர் என்று   தெரிவித்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாவட்ட நிர்வா கத்திற்கும்,  மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலருக்கும் தெரிவித்திருக்கிறோம். இது வரை ஆசிரியைகள் கைது செய்யப்பட வில்லை. தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக பள்ளிகளில் கள ஆய்வை நடத்த  இருக்கின்றோம்.  இந்த பிரச்சனையில் பள்ளி தலைமை ஆசிரியை உட்பட 5 ஆசிரி யைகள் மீது வன்கொடுமை பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வில்லை என்றால், தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மற்றும் தேசிய எஸ்.சி.  எஸ்.டி. ஆணையத்தை நாட உள்ளோம் என்று தெரிவித்தார்.

;