districts

கல்லூரிகளில் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் மாணவர் சங்க மாவட்ட மாநாடு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 27 - இந்திய மாணவர் சங்க திருச்சி மாநகர் மாவட்ட 26-வது கல்வி உரிமை மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் சூரியா தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் சம்சீர்அகமது துவக்கவுரையாற்றினார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷாதேவி வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் மோகன் பேசினார்.  திருச்சி சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தந்தை பெரியார் கல்லூரியில் விடுதியில் உள்ள மாணவர்களுக்கு தரமான உணவு சுகாதாரமான கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். யுடிசி கல்லூரியில் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மாணவர்களிடையே சாதிய பாகுபாடு பார்ப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மாவட்டத்தின் புதிய தலைவராக ஜெ.சூரியா, மாவட்டச் செயலாளராக ஜி.கே.மோகன் உள்பட 21 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில துணைத் தலைவர் கண்ணன் நிறைவுரையாற்றினார்.  முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரி ராமச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ் நன்றி கூறினார்.

;