districts

img

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு இழப்பீடு வழங்குக! ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் மனு

திருச்சிராப்பள்ளி, ஆக.26 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்  தலைமையில் வெள்ளிக்கிழமை விவசாயி கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் தனபால், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் இளங் கோவன், செல்வகுமார், ராஜேஷ்கண்ணா, ஜோதிமுருகன், பாலன் உள்பட விவசா யிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த  மனுவில், “திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஸ்ரீரங்கம் வட்டம் திருவளர்சோலை, பனைய புரம், உத்தமர்சீலி, கவுத்தரசநல்லூர், கிளிக்கூடு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் பூக்கொல்லைகள் நீரில்  மூழ்கின. கடந்த 20 நாட்களாக தண்ணீர்  வடியாததால் இவை அழுகிய நிலையில்  உள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகளின்  வாழ்வாதாரம் கேள்விக் குறியாக உள்ளது.  மேலும் சாகுபடி செய்த நிலங்களில் இருந்த மின் மோட்டார், ஆயில் மோட்டார் கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள் ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய இழப்பீடு தொகையையும், புதிய மின், ஆயில் மோட்டார்களையும் வழங்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.  மேலும் மற்றொரு மனுவில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆலத்தூர் கிராமத் தில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கா லில் உள்ள ஆகாயத் தாமரையை அகற்ற  வேண்டும். அந்தநல்லூர் ஒன்றியத்திற்குட் பட்ட பேரூர் கிராமத்தில் உள்ள பேரூர் கல்லாயி அம்மன் குளத்திலிருந்து சன்னாசியப் பன் கோவில் வரை செல்லும் வாய்க்காலை தூர்வார வேண்டும். மணிகண்டம் ஒன்றியம் புதிய மேட்டுக்கட்டளை வாய்க்காலை தூர்வார வேண்டும்.  மணிகண்டம் ஒன்றியம் பூங்குடி கிரா மத்தில் உள்ள பெரிய குளத்தின் உடைந்த ஷட்டரை சீரமைக்க வேண்டும். விவசாய கடனுக்கு பிரதமர் மோடி அறிவித்த கிசான் கிரடிட் கார்டு விண்ணப்பித்தும், எந்த வங்கி யிலும் கார்டு வழங்கப்படவில்லை. எனவே  வங்கி அதிகாரிகளிடம் பேசி, கார்டுகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என தெரிவித்திருந்தனர்.

;