districts

கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைத்திடுக! அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, ஏப்.17 - மயிலாடுதுறை மாவட் டம் திருக்கடையூரில் தமிழ்நாடு அனைத்து சமய  நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்  விவ சாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் மேகநாதன் வரவேற்று பேசினார். விவ சாயிகள் சங்க மாவட்ட தலை வர் டி. சிம்சன், மாவட்ட செய லாளர் துரைராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் சங்க  மாவட்ட செயலாளர் டி.கணே சன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர். தமிழ்நாடு அனைத்து சமய  நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்க மாநில அமைப்பாளர் நடரா ஜன், புதிதாக தேர்வு  செய்யப்பட்ட நிர்வாகி களை அறிவித்து நிறைவுரை யாற்றினார்.  வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் அறநிலையத் துறை மானியக் கோரிக்கை யில், கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட வாடகையை  குறைக்க வேண்டும். குடி யிருப்பு வாசிகளுக்கு ஏற்க னவே உள்ள நிலுவைத் தொ கையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  அரசு ஏற்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் யார்?  என்று அடையாளப்படுத்தப் படும் பயனாளிகள் மீது யார்  வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். அதன் பேரில்  அவர்களை கைது செய்து ஜாமீனில் வெளியில் வர முடி யாதபடி சிறையில் அடைக்க லாம் என்று உள்ள 79 பி  திருத்தச்சட்டத்தை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.  மாநாட்டில் மாவட்டத் தின் புதிய தலைவராக த.ராயர், துணைத் தலை வர்களாக ராஜகோபால், தங்கப்பன், செயலாளராக ஏ.ஆர்.விஜய், இணை செய லாளர்களாக விஜயா பாலையா, பொருளாளராக அ. ராமலிங்கம் உள்ளிட்டோ ரும், 7 பேர் கொண்ட மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய 17 பேர் கொண்ட மாவட்டக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஏ.ஆர்.விஜய் நன்றி கூறினார்.

;