districts

திருச்சி முக்கிய செய்திகள்

பெண் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

தஞ்சாவூர், ஏப்.27-  கும்பகோணத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தையல் தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாதுளம் பேட்டை பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் டி. சரவணன்  (44). தையல் தொழிலாளியான இவர், 2014 ஜூன் 26 அன்று குடிபோதையில் வீட்டுக்கு சென்று, வெளியில் தகராறு  செய்தார். இது தொடர்பாக இவருக்கும், பக்கத்து  வீட்டைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி தமிழ்ச்செல்விக் கும் (60) இடையே தகராறு ஏற்பட்டது.  இதில், தமிழ்ச்செல்வியை சரவணன் கத்தியால் குத்தி னார். இதனால் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வி தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து சரவண னைக் கைது செய்தனர்.  இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை  நீதிபதி ஜி.சுந்தர்ராஜன் விசாரித்து, சரவணனுக்கு ஆயுள்  சிறை தண்டனையும், ரூ.5, 500 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

இணையவழியில் வேலை பொறியாளரிடம்  ரூ.12.65 லட்சம் மோசடி

தஞ்சாவூர், ஏப்.27- கும்பகோணத்தில் பொறியாளரிடம் இணைய வழி யில் பகுதிநேர வேலை எனக் கூறி ரூ.12.65 லட்சம் மோசடி  செய்த மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வரு கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பொறியாளருக்கு இரு வாரங் களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில், குறிப்பிட்ட தொகை செலுத்தினால் அதிக லாபம் பெறலாம் என விளம்பரம் வந்தது. அதிலுள்ள இணைப்பைச் சொடுக்கியபோது, அது டெலிகிராம் குழுவுக்கு சென்றது. அதில் இருந்த போலி நபர்கள் இணைய வழியில் பகுதிநேர வேலை என்றும், டாஸ்குகள் மூலம் அதிக லாபம் பெறலாம் எனவும்  கூறினர். இதை நம்பிய பொறியாளர் டாஸ்க்குகளை நிறை வேற்றி ரூ.22 ஆயிரம் அனுப்பிய நிலையில் ரூ.5 ஆயிரம் தான் கிடைத்தது. இதையடுத்து, ரூ.1.50 லட்சம் என பல்வேறு  தவணைகளாக ரூ.12.65 லட்சம் அனுப்பிய நிலையில், அவ ருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தஞ்சாவூர் இணையதள குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்  பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேளாண் மாணவர்கள் செயல் விளக்கப் பயிற்சி 

தஞ்சாவூர், ஏப்.27-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரத்தில் புதுக் கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதி யாண்டு பயிலும் மாணவர்கள், கிராமத்தில் தங்கி பணி அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனர்.  இதனொரு பகுதியாக, பேராவூரணி அருகே உள்ள  செருவாவிடுதி கிராமத்தில், போர்டாக்ஸ் கலவை தயாரிப்பு, அதன் பயன்கள் பற்றிய செயல் விளக்கத்தை விவசாயிகளுக்கு செய்து காட்டினர்.  இந்தக் கலவையை  தெளிப்பதன் மூலம், தோட்டக்கலை பயிர்களில் பூஞ்சை  நோய்களான கால் அழுகல் நோய், தண்டு அழுகல் நோய்,  இலை கருகல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகிய வற்றை கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு வேளாண்  மாணவர்கள் விளக்கமளித்தனர். 

மலக்குடலில் மறைத்து  977 கிராம் தங்கம் கடத்தல்

திருச்சிராப்பள்ளி, ஏப்.27- திருச்சி விமான நிலையத்திற்கு வெள்ளியன்று துபா யில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்  பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரி கள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உடலில், மலக்குடலில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து  வந்த ரூ.70,58,825 மதிப்புள்ள 977 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தங்கம் கடத்தி  வந்த பயணியை கைது செய்து அவரிடம் தொடர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு ஏப்.29 இல் முன்பதிவு தொடக்கம்

தஞ்சாவூர், ஏப்.27-  தஞ்சை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தமிழ்நங்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை  நிலையத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற் கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய  பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை முன்பதிவு ஏப்ரல் 29 அன்று (திங்கட்கிழமை) தொடங்கு கிறது. இந்த பயிற்சி செப்டம்பர் மாதம் தொடங் கப்படுகிறது. பயிற்சி காலம் ஓர் ஆண்டு. இரு பருவ முறைகளில் பயிற்சி வகுப்பு கள் நடைபெறும். தமிழில் மட்டுமே பயிற்சி  வகுப்புகள் நடத்தப்படும். இதில் சேர்வதற்கு  17 வயது நிரம்பியிருக்க வேண்டும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த  பயிற்சிக்கான நிபந்தனைகள், பயிற்சி கட்டண விவரங்கள் www.tncuicm.com  என்ற இணையதள முகவரியில் வெளியிடப் படும்.  மேலும் இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மேற்கண்ட இணையதள முக வரி மூலமாகவோ, பயிற்சி மையத்தின் மூல மாகவோ விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவ ரங்கள் தேவைப்படுவோர் முதல்வர், பட்டுக் கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிலையம்,  தாலுகா அலுவலகம் அருகில், முத்துப்பேட்டை  சாலை, நாடிமுத்து நகர்-அஞ்சல் பட்டுக் கோட்டை - 614602 தஞ்சாவூர் மாவட்டம் என்ற  முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் சாலையில் திடீர் மெகா பள்ளம்
சீரமைப்பு பணிகள் தீவிரம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.27- திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி  ரோடு சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக வெள்ளியன்று காலை திடீர் மெகா  பள்ளம் ஏற்பட்டது.  சாலையின் கீழ் சுமார் 7 அடி ஆழத்தில்  பதிக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை சிமெண்ட் குழாய் உடைந்து, சாலையில் மிகப் பெரிய ஓட்டை விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் அவ்வழியே செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த மெகா பள்ளம் காரணமாக, அப்பகு தியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப் பட்டு மாற்றுப் பாதையில் அனைத்து வாக னங்களும் திருப்பி விடப்பட்டன. உடைந்த குழாயை மாற்றி, பள்ளத்தை சீர் செய்யும் பணிகள் 2 ஆம் நாளான சனிக்கிழமையும் தொடர்ந்தது. உடைந்த இந்த குழாய் கடந்த 1977  ஆம் ஆண்டு பதிக்கப்பட்டது. இதுவரை குழாய்கள் தாக்குப் பிடித்ததே அதிசயமாக பார்க்கப்படுகிறது. ஏறத்தாழ 47 ஆண்டு கள் பழமையான இந்த குழாய்கள், ஸ்ரீரங் கத்தை சுற்றி சுமார் 2 கிலோ மீட்டர் தொலை விற்கு பதிக்கப்பட்டுள்ளது. எனவே இவை அனைத்தையும் அகற்றி விட்டு இரும்பு குழாய்களை பதிப்பதுதான், இதற்கு நிரந்தர தீர்வாக அமையும் என கூறப்படும் நிலையில், மாநகராட்சி அதிகாரி கள் இதுகுறித்து, ஆராய்ந்து  வருகின்றனர்.

பொதுமக்களுக்கு நீர், மோர்  பந்தல் அமைத்து உதவுக! திமுக எம்எல்ஏ வேண்டுகோள் 

தஞ்சாவூர், ஏப்.27-  தி.மு.கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கு ஏற்ப, தஞ்சை தெற்கு மாவட்டம் முழுவதும் நீர், மோர் பந்தல் அமைத்து பொது  மக்களுக்கு உதவிடுமாறு, தஞ்சை தெற்கு மாவட்டச் செய லாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மே 1 ஆம் தேதி முதல் கடும்  வெயிலும், மே 4 இல் இருந்து கத்தரி வெயிலும் ஆரம்பிக்கும்  என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. கடும் வெயிலில்  பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை சமாளிக்கும் வகை யில் ஆங்காங்கே பொதுமக்கள் கூடும் இடங்களில் நீர், மோர்  பந்தல் கழக அமைப்புகளின் சார்பில் அமைத்து பொதுமக்க ளுக்கு உதவிட வேண்டும். தஞ்சை தெற்கு மாவட்டத்திலுள்ள ஒன்றிய, நகர, பேரூர்,  கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகி கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னணியினர் ஆங்காங்கே நீர், மோர் பந்தல் அமைத்து மக்கள் பணியில்  தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித் துள்ளார்.

மணல் கொள்ளையை தடுக்காத  அதிகாரிகளை கண்டித்து மறியல்

அரியலூர், ஏப்.27 - அரியலூர் அருகே மணல் கொள்ளையை தடுக்காத அதி காரிகளை கண்டித்தும், விவசாய நிலத்திற்கு பாதை வசதி, மழைநீர் வடிகால் வசதி அமைத்து தரக் கோரியும்  நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேல ணிக்குழி குடிகாடு கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலை யில் தூர்வாரும் பணிகளில் மணல் கொள்ளை நடப்பதாக வும், விவசாய நிலத்திற்கு பாதை வசதி மற்றும் மலட்டு ஏரி  அருகே மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.  இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 300-க்கும்  மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த னர். அப்போது, போலீசார் இரண்டு நாள் கால அவகாசம் கேட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தி ருந்தனர். ஆனால் இரண்டு நாட்களைக் கடந்தும் பொதுமக்க ளின் கோரிக்கையை நிறைவேற்றாததால், 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சனிக்கிழமை மேலணிக்குழி-காட்டுமன் னார்குடி குடிகாடு செல்லும் சாலையில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய பலன் கிடைக்கவில்லை. பின்னர் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய மக்களிடம் மீண்டும்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் வெயிலைப் பொருட்படுத்தாமல், மக்கள் சாலையில் அமர்ந்தும், படுத்துக் கொண்டும் நூதன முறை யில் போராட்டத்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடந்தது. இதனிடையே போலீசார் மீண்டும்  பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதி அளித்ததன்பேரில், தங்களது போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர்.

விவசாயிகளுக்கு பயறு ஒண்டர் வளர்ச்சி ஊக்கி வழங்கல்

பாபநாசம், ஏப்.27 - தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை வட்டா ரத்தில் 10 விவசாயிகளுக்கு பயறு ஒண்டர் வளர்ச்சி ஊக்கியை வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் வழங்கினார்.  அப்போது அவர் கூறுகையில், உளுந்து பயிர் பூக்கும்  பருவத்தில் 30 மற்றும் 50 ஆம் நாள் டி.ஏ.பி கரைசல்  இலை வழியாகத் தெளிக்கப்படுகிறது. இது பூக்களை அதிகப்படுத்தி காய்க்கும் திறனை அதிகப்படுத்துகிறது. டி.ஏ.பி கரைசலுக்கு மாற்றாக வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின்கீழ் பயறு ஒண்டர் வழங்கப்படுகிறது.  இதனால் பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு பூக்கும்  திறன் அதிகரிக்கிறது. 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது.  வறட்சியைத் தாங்கி பயிர் வளர்வதுடன், பேரூட்டச் சத்து கள், நுண்ணூட்டச் சத்துகள் பயிருக்கு கிடைக்கின்றன. ஏக்கருக்கு 20 கிலோ பயறு ஒண்டரை 20 லிட்டர் தண்ணீரில்  கலந்து, கரைசல் தயாரித்து 1 டேங்குக்கு 1 லிட்டர் பயறு  ஒண்டர் கரைசலுடன், ஒன்பது லிட்டர் தண்ணீர் கலந்து,  மாவிற்கு 7 டேங்க் என்றளவில் தெளிக்க வேண்டும்.  காலை, மாலை வேளையில் இலைத் துளைகள் திறந்து  இருப்பதால் அந்நேரத்தில் பயறு ஒண்டர் தெளிப்பதால் நன்கு கிரகிக்கப்பட்டு, 4 மணி நேரத்தில் கரும்பச்சை நிறத்தில் மாறி ஒளிச்சேர்க்கையை அதிகப்படுத்துகிறது. இதனால் பயிர்கள், வேர்கள் மூலம் உறிஞ்சும் சத்துகள்  அதிகரித்து வேர் முடிச்சுகள் அதிகளவில் உற்பத்தியா கின்றன. இதன் விளைவாக பூக்களின் எண்ணிக்கை அதிகரித்து, தேவையான நுண்ணூட்டச் சத்துகள் கிடைப்ப தால், வேர் முடிச்சுகள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரித்தல், பூக்கள்  உதிராமல் காய்களாக மாறும். இதன்மூலம் ஏக்கருக்கு 100  கிலோவிலிருந்து, 150 கிலோ வரை மகசூல் அதிகமாகக்  கிடைக்கும்” என்றார்.

அரசுப் பேருந்துகளின் வகையை  குறிப்பிட்டு இயக்க உத்தரவிடக் கோரி வழக்கு போக்குவரத்து ஆணையர் பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஏப்.27- தமிழக அரசு பேருந்துகளில் பேருந்துகளின் வகையை குறிப்பிட்டு இயக்க உத்தரவிடக் கோரிய  வழக்கில் தமிழக போக்குவரத்து துறையின் ஆணை யர், பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தமிழகத்தில் பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள், அவற்றின் வசதி களுக்கு ஏற்ப, டீலக்ஸ் இல்லாதது, செமி டீலக்ஸ்,  டீலக்ஸ்,ஏ.சி.டீலக்ஸ் (Non- Deluxe, Semi Deluxe,  Deluxe, A.C.Deluxe) என வகைப்படுத்தப்படுகின்றன.  இதன் அடிப்படையில் இருக்கை, காற்றோட்டம், குளிர்சாதனம் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். அதன்  அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படு கின்றன. தற்போது பேருந்துகளின் வகையை குறிப்பி டாமல் 1 to1, 1to3, 1to5 என்பது போல பேருந்துகளில்  தகவல் பலகை வைக்கப்படுகிறது. ஆகவே பேருந்து களின் வகையை குறிப்பிட்டு பேருந்துகள் இயக்கப்படு வதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறி யிருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள்  சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு முன்பு நடை பெற்றது.அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறையின் ஆணையர், போக்கு வரத்துத் துறையின் நிர்வாக இயக்குநர் பதில் மனு  தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். வழக்கை 4  வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு  கஞ்சா விற்ற 3 பேர் கைது

விருதுநகர், ஏப்.26- விருதுநகர் கிருஷ்ணமாச்சாரி சாலையில் பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பள்ளி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா  விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை மடக்கிய பஜார் போலீசார், 90 கிராம் கஞ்சாவை  பறிமுதல் செய்தனர். மேலும், விற்பனையில் ஈடுபட்ட 116  காலனியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, சென்னையைச் சேர்ந்த  அஜய், அல்லம் பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார்  ஆகியோரைக் கைது செய்தனர்.

மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உயர்கல்வி மிக அவசியம்

இராமநாதபுரம் ஆட்சியர் பேச்சு

இராமநாதபுரம்,ஏப்.27- இராமநாதபுரம் மாவட்ட  ஆதிதிராவிடர் -பழங்குடி யினர் நலத்துறை மற்றும் பள்  ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டல் -  2024-க்கான ‘என் கல்லூரி  கனவு” நிகழ்ச்சி சையதம் மாள் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் ஏப்ரல் 26 வெள்  ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்தி ரன் தலைமையேற்று துவக்கி  வைத்து உரையாற்றினார். ஆட்சியர் பேசுகையில், உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி என்பது 12-ஆம்  வகுப்பு மாணவ, மாணவி களுக்கு மிக முக்கியமான  ஒன்றாகும். ஒவ்வொரு மாண வரின் எதிர்காலத்தை நிர்ண யிக்க தேவையான கல்வி யை தேர்வு செய்ய வேண்டும்  என்பதே இந்த வழிகாட்டுதல்  நிகழ்ச்சியின் நோக்கமாகும்.  12-ஆம் வகுப்பு படித்து முடித்த அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டாயம் உயர்கல்வி படிக்க வேண் டும். உயர்கல்வியால் மட்  டும் தான் சரியான வேலை வாய்ப்பை பெற்றிட பயனுள்  ளதாக இருக்கும். ஒவ்வொரு மாணவருக் கும் இலட்சியம் மற்றும் கனவு கண்டிப்பாக இருக் கும். அந்த நிலைப்பாட்டை வெற்றியடைய செய்யும்  காலம் என்பது 12-ஆம் வகுப்பு முடித்த நிலையில் தான் உயர்கல்வியை தேர்வு  செய்வதற்கான நிலை உரு வாகும். இந்த காலக்கட் டத்தை தவறவிடாமல் பயன்படுத்தி தங்கள் இலட்சி யத்திற்கும், திறமைக்கும் ஏற்ற உயர்கல்வியை தேர்வு  செய்து படிக்க வேண்டும். உயர்கல்வி படிப்பதற் கான அத்துணை வழிகாட்டு தல்களையும் அரசு செய்து  வருகிறது. எனவே தங்க ளுக்கு உரிய காலத்தை தவற விடாமல் பயன்படுத்தி பயன்  பெற வேண்டும் என கேட்டுக்  கொண்டார்.

காசோலை மோசடி செய்தவருக்கு 6 மாதம் சிறை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

அருப்புக்கோட்டை, ஏப்.27- அருப்புக்கோட்டையில் காசோலையில் மோசடி செய்தவருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.4.50  லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி நீதிமன்றம் உத்தர விட்டது.  விருதநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியை சேர்ந்தவர் நாகராஜன் (52). அரசு பள்ளி யில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரிடம் திருப்பதி என்பவர் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம்  கடனாக பெற்றுள்ளார். பின்னர் வாங்கிய கடனுக்காக  அதே தொகைக்கு காசோலையை கொடுத்துள்ளார். அதை, ஆசிரியர் நாகராஜன் வங்கியில் செலுத்தி யுள்ளார். ஆனால், அந்த வங்கி கணக்கில் பணமின்றி காசோலை திரும்பியது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நாக ராஜன், அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி  முத்து இசக்கி, திருப்பதிக்கு 6 மாத சிறை தண்டனை யும், ரூ.4.50 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.

\நாளை முதல் கோடைகால பயிற்சி முகாம்

ஆட்சியர் தகவல் பெரம்பலூர், ஏப்.27 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட விளை யாட்டுப் பிரிவின் சார்பாக மாவட்ட அளவி லான கோடைகால பயிற்சி முகாம், பெரம்ப லூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஏப்.29 முதல் மே 13 வரை நடைபெற உள்ளது. இம்முகாம் டேக்வாண்டோ, கைப்பந்து,  தடகளம், இறகுப்பந்து மற்றும் மேசைப்பந்து  ஆகிய விளையாட்டுகளுக்கு நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாண வரல்லாத 18 வயதிற்குகீழ் உள்ள இளை ஞர்கள் கலந்து கொள்ளலாம்.  ஆதார் கார்டு  நகலை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனை வருக்கும் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.  பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் ஒவ் வொரு நபரும் வருவாய் மெசின் மூலம் மட்டுமே சந்தா தொகை ரூ.200-ஐ செலுத்த வேண்டும். சந்தா தொகையானது ரொக்க மாகப் பெறப்பட மாட்டாது. பயிற்சி முகாமில்  கலந்து கொள்பவர்கள் பெரம்பலூர் மாவட்ட  விளையாட்டு அரங்கத்தில் பெயர்களை பதிவு செய்து, மாவட்ட விளையாட்டு அலுவ லரது தொலைபேசி.7401703516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  எனவே பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்-வீராங்க னைகள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க. கற்பகம் தெரிவித்துள்ளார்.

 

;