districts

செப்.16-ல் திருச்சி புத்தகத் திருவிழா துவக்கம்: அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி, ஆக.30 - திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில்  ‘திருச்சி எழுதப் போகும் புதிய வரலாறு’  என்ற தலைப்பில் புத்தகத் திருவிழா  செப்டம்பர் 16 ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) தொடங்கி செப்டம்பர் 26 வரை  11 நாட்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. நகராட்சித் நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆகியோர் விழாவை தொடங்கி வைக்கின்றனர். இதில் 200-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளோடு, 150-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களுடன் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு, கீழடி தொல்லியல் ஆய்வு, திருச்சி மாவட்டத்தின் சிறப்பு, திருச்சி  மாவட்ட எழுத்தாளர்கள் அரங்கு, சிறுவர் சினிமா மற்றும் மகளிருக்கான அரங்குகள் என பன்முகத் தன்மை  கொண்ட அரங்குகள் அமையவுள்ளன. தினந்தோறும் மாலை கலை நிகழ்வுகள், தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களின் உரை மற்றும் திருச்சி மாவட்ட அறிஞர்கள், எழுத்தா ளர்களை பாராட்டிச் சிறப்பிக்கும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்த அரங்குகள் காலை 10 மணி முதல் இரவு  9 மணி வரை திறந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப் பிட்ட நேரத்தில் 5 லட்சம் பேர் ஒரு மணி நேரம் வாசிக்கும் விதமாக, ‘திருச்சியே  வாசி’ என்ற வாசிப்பு இயக்கம் நடத்தப்ப டும். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூ ராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் புத்த கத் திருவிழா விழிப்புணர்வுப் பேரணி களும் மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப் படும். திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு  அலுவலகங்களிலும் மற்றும் பொது  இடங்களிலும்  புத்தகச் சுவர் உருவாக் கப்படும். இது பொதுமக்களிடமிருந்து பயன்படுத்தப்பட்ட நூல்களை நன்கொ டையாகப் பெற்று, அந்த நூல்களை ஊர்ப்புற நூலகங்களுக்குப் பகிர்ந்த ளித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் புதிய செயலை உருவாக்கும் என  திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்  தெரிவித்துள்ளார்.

;