districts

img

சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க வட்டியில்லா கடன் வழங்க வலியுறுத்தல்

திருவண்ணாமலை, மே 10- கந்து வட்டி கொடுமையிலிருந்து சாலை யோர வியாபாரிகளை காக்க வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சக்தியாகு தலைமையில் திரு வண்ணாமலை மாவட்டம் செய்யாரில் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் திருவேட்டை துவக்க உரையாற்றினார். மாநில கன்வீனர் பி.கருப்பையன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். கந்து வட்டி கொடுமையில் இருந்து ஏழை எளிய, சாலையோர வியாபாரி களுக்கு, கூட்டுறவு வங்கிகள் மூலம் வார தவணையில் திருப்பி செலுத்தும் வகையில், வட்டி இல்லா கடனாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியதை தமிழக அரசு உடனடியாக நிறை வேற்ற வேண்டும். ஸ்மார்ட் சிட்டி, போக்குவரத்துக்கு இடை யூறு என பல காரணங்களை கூறி, புதுச்சேரி உட்பட தமிழகத்தின் பல நகரங்களில் காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்துவது, பொருட்களை பறி முதல் செய்வது, சாலையோர வியாபாரி கள் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமான தாகும்.  எனவே, சட்டத்தை மதித்து நடப்பதோடு, சாலையோர வியாபாரிகளை பலவந்தமாக அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும். இதுவரை அடையாள அட்டை வழங்காமல் விடுபட்டுள்ள சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து, அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி. நிர்வாகிகள் வெ.சங்கர், ஆர்.சசிகுமார், மோகன், செல்வம், ரங்கராஜன், சங்கமேஸ்வரன், வடிவேலு, செந்தில், ராமு, வேங்கையன், தாமஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;