districts

img

ஏப்ரல் 5 அன்று தலைநகர் தில்லியில் பேரணி மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு நடைபயணம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 8-  ஏப்ரல் 5 அன்று தலைநகர் தில்லி யில் நடைபெறும் பேரணியை முன்  னிட்டு மாநிலம் தழுவிய நடை பயண பிரச்சார இயக்கம் இந்திய  தொழிற்சங்கம் (சிஐடியு), தமிழ் நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் தமிழ்நாடு முழு வதும் நடைபெற்று வருகிறது. இதனொரு பகுதியாக திருவா ரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இயக்கத்தை மாநி லக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் துவங்கி வைத்தார். இதில்  சிஐடியு மாவட்டத் தலைவர் கே.என்.அனிபா, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர்  பவுன்ராஜ், விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் வி.ராஜாங்கம் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்  துறைப்பூண்டியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நடைபயணத்தை விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொது செயலாளர் வி. அமிர்தலிங்கம் துவக்கி வைத்தார்.  சிஐடியு மாவட்ட துணைச் செய லாளர் கே.பி.ஜோதிபாசு, விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆறு பிரகாஷ், மாவட்டத் துணைச் செயலாளர் எம்.ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மன்னார்குடியில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரெகு பதி தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் விவசாயிகள்  சங்க மாவட்டப் பொருளாளர் வி. எஸ்.கலியபெருமாள், விவசாயி கள் சங்க நகரப் பொருளாளர் ஜி.மாரிமுத்து, சிஐடியு ஒருங்கி ணைபாளர் ஏ.கோவிந்தராஜ், இணைப்பு சங்க மாவட்ட மதிப்புறு தலைவர் டி.ஜெகதீசன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள  காரையூரில் நடைபெற்ற பிரச்சா ரத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றி யச் செயலாளர் பி.ராமசாமி தலை மை வகித்தார். விவசாயத் தொழி லாளர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் பக்ருதீன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை  தலைவர் நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் நாராயணமூர்த்தி தலைமை வகித் தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா, சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கர்ணா, விவ சாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் 
குடவாசல் ஒன்றியம் எர வாஞ்சேரியில் நடைபெற்ற பிரச்சா ரத்தை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி துவக்கி வைத்தார். பயணக் குழு விற்கு சங்கங்களின் நிர்வாகிகள் ஆர்.ராஜேந்திரன், வி.ராஜதுரை, எஸ்.கிருஸ்துவநான், டி.எஸ்.சர வணன், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுகம், ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம்.கலைமணி நிறைவுரையாற்றினார். நன்னிலம் ஒன்றியம் கொல்லு மாங்குடியில் நடைபெற்ற பிரச்  சாரத்திற்கு சிஐடியு மாவட்ட  துணைத் தலைவர் டி.வீரபாண்டி யன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்  றியச் செயலாளர் சரவண.சதீஷ்  குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;