districts

img

நிலுவையில் உள்ள தடையாணை வழக்கு ‘ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் வீட்டை இடிக்க வந்த நகராட்சி நிர்வாகத்தினரை தடுத்து சிபிஎம் போராட்டம்

அறந்தாங்கி, ஏப்.9 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் சன்னதிவயல் 4  ஆம் வீதியில், பரம்பரை அறங்காவலர் என்ற மோச டிப் பேர்வழிகளின் பொய் யான தகவல்களாலும், நிலத்தின் தன்மை குறித்து வருவாய்த்துறையோ, இந்து  சமய அறநிலையத்துறையோ அளவை செய்து, நிலம் அரசு  புறம்போக்கு இடமா, செல்வ  விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான நிலமா என்றும் தீர்க்கமான முடிவை எட்ட வில்லை.  இந்நிலையில், 60 ஆண்டு களுக்கு மேலாக குடியிருந்து  வரும் மக்களை ‘ஆக்கிர மிப்பு’ என்ற பெயரில், நீதி மன்றத்தில் தளத்தின் தன்மை களை சட்டரீதியாக எடுத்து ரைக்க முயற்சி செய்யாமல் வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ் கொடுத்து, அவ காசம் ஏதுமின்றி உடனே இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் அப்பகுதி மக்கள் மற்றும் சிபிஎம் மூத்த  தலைவர் ஜியாவுதீன், ஒன்றி யச் செயலாளர்கள் தென்றல்  கருப்பையா, நெருப்பு முரு கேஷ், வாலிபர் சங்க மாவட்ட  தலைவர் கர்ணா, மாதர் சங்க  மாவட்ட பொருளாளர் பாண்டிச்செல்வி, நகர காங்கி ரஸ் தலைவர் வீராச்சாமி, தேமுதிக மாநில பொதுக் குழு உறுப்பினர் காந்தி, சிபிஎம் நகர செயலாளர் கணேசன், சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். வீட்டை இடிக்க வந்த நக ராட்சி ஆணையர் மற்றும்  அலுவலர்கள், காவல்துறை யினர் ஜேசிபி எந்திரத்தோடு இடிக்க வரும்போது, வீட்டை இடிக்க அனுமதிக்கா மல் தரையில் அமர்ந்து தடுத்து நிறுத்தி போராட்டம் செய்ததால், நகராட்சி நிர்வா கத்தினர் திரும்பி சென்றனர். இதனால் தடுத்து நிறுத்திய வர்கள் மீது வழக்கு தொடரப் பட்டுள்ளது.  இதுகுறித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் கவி வர்மன் கூறுகையில், “பரம்பரை அறங்காவலர்கள் என்ற பெயரில் மக்களை தொடர்ச்சியாக பணம் கேட்டு  மிரட்டி, தண்டல் வசூலில் ஈடு படும் கண்ணன், அம்மை யப்பன், அறநிலையத்துறை மூலம் நியமிக்கப்பட்டுள்ள கொள்ளைக்காரர்களே இதற்கு காரணமாக இருப் பார்கள். தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் தலை யிட்டு அங்குள்ள மக்களின் உண்மையான பிரச்சனை என்னவென்று ஆராய்ந்து மக்களை காப்பாற்ற நடவ டிக்கை மேற்கொள்ள வேண் டும். வீடுகளை இடிக்கும் முயற் சியை கைவிட வேண்டும். 60 ஆண்டுகளாக குடியி ருப்பவர்களை அனுமதி பெறாத மனைப்பிரிவு என வழக்குப் பதிவு செய்வதை  கண்டித்து பல போராட் டங்கள் நடத்தப்பட்டு, ஆர்.டி.ஒ. தாசில்தார் தலைமை யில் நடைபெற்ற சமாதா னக் கூட்டங்களை அம்மை யப்பன், கண்ணன், இருவ ரும் புறக்கணித்துள்ளதற்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அம்மையப் பன், கண்ணன் செய்த மோச டிகளை கண்டித்து மக்கள்  நடத்தியுள்ள போராட்டங் கள்,  கடந்த மாவட்ட ஆட்சி யரிடம் கொடுத்த புகார், காவல் நிலையத்தில் கொடுத்த மோசடி புகார் கள், இந்து சமய அற நிலையத்துறை அதிகாரி களிடம் கொடுத்த புகார்கள் அனைத்தும் என்னவாயின?  ஆக்கிரமிப்பு என்ற பெய ரில் நடக்கும் மோசடி பேர் வழிகள் அம்மையப்பன், கண்ணன் ஆகியோரிடம் விலைபோன அனைத்துக் கும் எதிராக, மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் பொது மக்கள் போராட்டம் நடை பெறும். 60 ஆண்டுகளாக இங்கு வசித்து வருபவர் களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும்” என்றார்.

;