districts

img

ஆட்சியர், சின்னத்துரை எம்எல்ஏ முயற்சியால் வேங்கைவயல் மக்கள் வாக்களித்தனர்!

புதுக்கோட்டை, ஏப்.19 - தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த வேங்கைவயல் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை உள்ளிட்டோரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை வாக்க ளித்தனர்.

புதுக்கோட்டை அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் பட்டி யலின மக்கள் வசிக்கும் குடியி ருப்புப் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த  2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தெரியவந்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்று, 15 மாதங் கள் கடந்தும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் மக்களவைத் தேர்தலைப் புறக்க ணிப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். இதே போல இறையூர் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தி ருந்தனர்.

அதன்படியே, வேங்கைவயல், இறையூர் கிராம மக்களில் 8 பேரைத் தவிர வேறு யாரும் மாலை வரை வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கவில்லை. 

மேலும், குளத்தூர் வட்டாட்சி யர் கவியரசு உள்ளிட்ட வரு வாய்த் துறையினரும், காவல் துறையினரும் சம்பந்தப்பட்ட மக்களிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிராம மக்கள் வாக்களிக்க சம்மதித்தனர். பின்பு மாலை 5.30 மணியளவில் அவர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தனர். வந்திருந்த அனை வருக்கும் டோக்கன் கொடுத்து மாலை 6 மணியை தாண்டியும் அவர்கள் வாக்களிக்க அனு மதிக்கப்பட்டனர்.

;