districts

img

கல்லூரிகளில் உள் புகார் கமிட்டி அமைக்க மாணவிகள் மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டை,  மார்ச் 11-  மாணவிகளின் பாது காப்பை உறுதிசெய்யும் வகையில் அனைத்துக் கல்லூரிகளிலும் உள் புகார் கமிட்டி (ஐசிசி) அமைக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தின் மாண விகள் மாநாடு வலியுறுத்தி உள்ளது. இந்திய மாணவர் சங்கத் தின் சார்பில் மாணவிகள் மாவட்ட மாநாடு புதுக்கோட் டையில் சனிக்கிழமை நடை பெற்றது. மாநாட்டிற்கு மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் எஸ். பிரியங்கா தலைமை வகித் தார். மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.வைஷ்ணவி வர வேற்றார். எஸ்.மகாலெட் சுமி சங்க கொடியை ஏற்றி னார். தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் மைதிலி கஸ்தூரிரெங்கன் மாநாட் டை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் சா. ஜனார்த்தனன், தலைவர் ஏ. சந்தோஷ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாண விகள் உபகுழு மாவட்டக் கன்வீனர் ரெ.கார்த்தி காதேவி, மாநிலச் செயற் குழு உறுப்பினர் மி.காவ்யா, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.நந்தனா ஆகியோர் பேசினர். மாநாட்டில், ஒன்றிய, மாநில அரசுகள் பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளில் சானிடரி நாப்கின் வசதியும் அதனை எரியூட்டுவதற்கான இயந்தி ரமும் வழங்க வேண்டும். பள்ளி பாடப் புத்தகங்களில் உளவியல் ரீதியிலான கருத்துக்களை இணைக்க வேண்டும். மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனை த்துக் கல்லூரிகளிலும் உள்  புகார் கமிட்டி (ஐசிசி) அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;