districts

img

அமைப்புசாரா நலவாரியத்தை செயல்படுத்துக தனியார் பேருந்து தொழிலாளர் சங்க மாநாடு கோரிக்கை

புதுச்சேரி,ஜூலை 30- அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தை செயல்படுத்திட வேண்டும் என்று தனியார் போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. புதுவை பிரதேச தனியார் போக்கு வரத்து தொழிலாளர் சிஐடியு சங்கத்தின் முதல் மாநாடு, முல்லை நகரில் நடைபெற்றது. தோழர் பால மோகனன் நினைவு அரங்கத்தில் நடை பெற்ற மாநாட்டிற்கு சங்கத்தின் பிரதேசத் தலைவர் மது தலைமை தாங்கினார். சிஐடியு பிரதேச செயலாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.  தமிழ்நாடு அரசு விரைவு போக்கு வரத்து கழக புதுச்சேரி பணிமனைத் தலைவர் சிவக்குமார், தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளன மாநிலக் குழு உறுப்பினர் ரவிச் சந்திரன், ஆட்டோ சங்கப் பிரதேச பொதுச் செயலாளர் விஜயகுமார் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் செயலாளர் மதிவாணன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். சம்மேளனத்தின் மாநில பொருளாளர் குப்புசாமி மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.  முன்னதாக சுதேசி பஞ்சாலையில் இருந்து துவங்கிய மாநாட்டு ஊர்வ லத்தை சிஐடியு பிரதேச துணைத் தலைவர் குணசேகரன் துவக்கி வைத்தார்.
நிர்வாகிகள்
சங்கத்தின் கவுரவத் தலைவராக ரவிச்சந்திரன், தலைவராக அந்தோணி தாஸ், பொதுச் செயலாளராக மதி வாணன், பொருளாளராக ராஜா உட்பட 13 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானம்
புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு துவங்கப்பட்ட நலச்சங்கம் சிஐடியு சங்கத்தின் தொடர் போராட்டத்தின் மூலமாக கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி யில் நல வாரியமாக மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்ட வாரியத்திற்கு உரிய நிதி ஒதுக்காத நிலையில், தற்போது வாரியத்தின் செயல்பாடு உறுப்பினர்களுக்கு எந்தவித பயனும் அளிக்கப்படாமல் முடக்கப் பட்டுள்ளது. எனவே வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தின் செயல்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.  மேலும் தனியார் போக்குவரத்து, சரக்கு வாகனங்களுக்கான பெட்ரோல் டீசல் மானிய விலை யில் வழங்க வேண்டும். புதுச்சேரி யில் இருந்து தமிழகத்திற்கு செல்லக் கூடிய வாகனங்களின் உரிமை யாளர்களுக்கே தெரிவிக்காமல். ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுவதை கைவிட வேண்டும். வாகனங்களுக்கு விதிக்கப்படும் இன்சூரன்ஸ் ப்ரீமியர் தொகையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

;