games

img

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்  

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரில் விளையாடி வருகிறது.  இதனைத் தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி இலங்கைக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியிலும், 2வது டெஸ்ட் போட்டி மார்ச் 12 ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

இதையடுத்து நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலியும், ரிஷப் பந்த்க்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.  அவர் டி20 போட்டிக்கான துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.    

மேலும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் அஜிங்கியா ரஹானே, சேத்தேஷ்வர் புஜாரா, சாஹா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:  

ரோஹித் சர்மா (கேப்டன்), மாயன்க் அகர்வால், பிரியன்க் பன்ச்சல், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பண்ட், கே.எஸ் பாரத், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ராஹ் (துணை கேப்டன்), முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார்.

;