headlines

img

நாணயமில்லா ஆணையம்!

ராஜஸ்தானில் இரு மதத்தினரிடையே நேரடியாக வன்முறையைத் தூண்டும் வகையில் மோடி வெறுப்பை உமிழ்ந்திருந்தார். ஆனால் இது குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை  வாய் திறக்க மறுக்கிறது. 

மறுபுறம் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி யில் பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கி ரஸ் வேட்பாளர்  நிலேஷ்கும்பானியின் வேட்பு மனு “பாஜகவின் திட்டப்படி” நிராகரிக்கப்பட்டி ருக்கிறது. அந்த சதிக்கூட்டணியில் தேர்தல் ஆணையமும் இணைந்திருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. சுயேட்சை வேட் பாளர்களை மிரட்டி வாபஸ் பெறச்செய்திருப்பதை பாஜகவின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே  பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளரின்   வேட்புமனுவை முன் மொழிந்த 5 பேரில் 3 பேர் தங்கள் கையெழுத்து இல்லை என்று சொன்னதால் வேட்பு மனு நிராக ரிக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தெரி வித்திருக்கிறது.

கையெழுத்திட்டவர்களில்  ஜகதீஷ் சவாலியா வேட்பாளரின் மருமகன்; துர்வின் தமேலியா வேட்பாளரின் அண்ணன் மகன்; ரமேஷ் போலா ரா என்பவர் வேட்பாளரின் தொழில் கூட்டாளி. இவர்கள் யாரும் நேரடியாக தேர்தல் ஆணை யத்தில் “இது எங்கள்  கையெழுத்து இல்லை”எனக் கூறவில்லை.  அவர்கள் எங்கு கடத்தப்பட்டிருக்கி றார்கள் என்றே தெரியவில்லை என காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

ஆனால் முன்மொழிந்தவர்களின் வாக்கு மூலம் என  பாஜக தரப்பில் கொடுத்த ஆவணத்தை அப்படியே ஏற்று,  தேர்தல் அதிகாரி, காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரித்துள் ளார். அதோடு காங்கிரசின் மாற்று வேட்பாளர் மனுவையும் நிராகரித்துள்ளார்.  இதுதான் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சமவாய்ப்பு தரும் லட்சணமா? 

தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக  பிரச் சாரத்தில் மதம் சார்ந்த படங்களையும், ராமர் கோவிலையும், இந்திய ராணுவத்தின் படங்க ளையும்  பாஜகவினர் தொடர்ச்சியாக பயன்படுத்து கின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் வேடிக்கை  பார்க்கிறது.

மேற்கு திரிபுரா தொகுதியில் பல வாக்குச் சாவடிகளை பாஜகவினர் அங்குள்ள அதிகாரிக ளின் துணையுடன்  கைப்பற்றியிருக்கின்றனர். ஆர்வக்கோளாறில் மொத்த வாக்குகளை விட கூடுதலான வாக்குகளையும்  பதிவு செய்துள்ள னர். இதைவிட முறைகேட்டிற்கு வேறு என்ன சான்று வேண்டும்? இதன் பின்னரும் அந்த தொ குதியின் தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவது ஏன்?

இந்திய தேர்தல் ஆணையத்தின் பணி நேர் மையாக தேர்தல் நடத்துவதா?  அல்லது பாஜகவை எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சியில் அமர்த்துவதா?

;